மெட்ரோ கட்டண உயர்வு - 8 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவிப்பு!

Delhi Money
By Sumathi Aug 25, 2025 07:57 AM GMT
Report

டெல்லி மெட்ரோ ரயில் கட்டண உயர்வை அறிவித்துள்ளது.

டெல்லி மெட்ரோ

டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனால் 2002 முதல் இயக்கப்பட்டு வருகிறது. 9 வழித்தடங்களிலும் ஒரு விமான நிலைய விரைவுப் பாதையிலும் இயக்கப்படுகிறது.

delhi

புதிய விதிகளின்கீழ், கட்டணம் 1 ரூபாயிலிருந்து 4 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், விமான நிலைய எக்ஸ்பிரஸ் பாதையில் இந்த அதிகரிப்பு அதிகபட்சமாக 5 ரூபாய் வரை இருக்கும்.

ரூ.15 வரை கட்டணத்தை உயர்த்திய வங்கி - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

ரூ.15 வரை கட்டணத்தை உயர்த்திய வங்கி - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

கட்டண உயர்வு

கட்டண மாற்றத்திற்குப் பிறகு, டெல்லி மெட்ரோவின் குறைந்தபட்ச கட்டணம் இப்போது ரூ.11 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.64 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் தேசிய விடுமுறை நாட்களில், கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளன.

மெட்ரோ கட்டண உயர்வு - 8 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவிப்பு! | Delhi Metro Fare Hike Ticket Details

32 கிலோமீட்டருக்கு மேல் உள்ள பயணங்களுக்கு முந்தைய ரூ.50 உடன் ஒப்பிடும்போது ரூ.54 ஆக உள்ளது. புதிய கட்டணங்கள் அமலுக்கு வந்ததன்மூலம், 12 முதல் 21 கிலோமீட்டர் வரை பயணிக்கும் பயணி ஒருவர்,

இப்போது ரூ.40க்கு பதிலாக ரூ.43 செலுத்த வேண்டும். அதே நேரத்தில் 21–32 கி.மீ. ஸ்லாப் கட்டணம் ரூ.50 இல் இருந்து ரூ.54 ஆக உயர்ந்துள்ளது.