படிக்காத மெசேஜ்கள் இனி இப்படி மாறிடும் - வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்
படிக்காத மெசேஜ்களை சுருக்கமாக மாற்றி தரும் விதமாக புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
படிக்காத மெசேஜ்
வாட்ஸ்அப் செயலியை சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் தேவைக்கு ஏற்ப வாட்ஸ்அப்பில் அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனம் வழங்கி வருகிறது.
அந்த வகையில் வாட்ஸ்அப் மெசஞ்சரில் பயனர்கள் படிக்காமல் விடுத்த மெசேஜ்களை மெட்டா ஏ.ஐ. மூலம் சுருக்கி தரும் அம்சம் அறிமுகமாகியுள்ளது.
புதிய அம்சம்
இதன்படி, வாட்ஸ்அப் பயனர்கள் தங்களுக்கு வரும் பர்சனல் மற்றும் குரூப் மெசேஜ்களை படிக்காமல் இருந்தால் அதை மெட்டா சுருக்கமாக மாற்றி தரும். இதன் மூலம் நீண்ட டெக்ஸ்ட் மெசேஜ்களை நெடுநேரம் ஸ்க்ரோல் செய்து பயனர்கள் படிக்க வேண்டிய அவசியம் இல்லை.
செய்திக்குறிப்பு போல மாற்றப்பட்டிருக்கும். ஆனால் வாட்ஸ்அப் பயனர்கள் மெட்டா ஏஐ சாட்பாட்டுக்கு படிக்காத மெசேஜ்களை சுருக்கமாக மாற்றித் தரும்படி கட்டளையிட்டால் மட்டுமே மெட்டா ஏஐ அதை செய்யும்.
தற்போது இந்த அம்சம் அமெரிக்காவில் ஆங்கில மொழியில் உள்ள மெசேஜ்களை மட்டுமே சுருக்கி தருகிறது. வரும் நாட்களில் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் இந்த அம்சம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.