வாட்ஸ்அப்பில் டெலிட் செய்த சாட்களை திரும்ப பெறலாம் - 3 வழிகள் இதோ..

WhatsApp
By Sumathi May 23, 2025 09:32 AM GMT
Report

 வாட்ஸ்அப்பில் இருந்து நீக்கப்பட்ட சாட்களை 3 வழிகளில் திரும்ப பெறலாம்.

டெலிட்டட் சேட்

வாட்ஸ்அப் செயலியில் உங்களின் தனிப்பட்ட சாட்கள் தற்செயலாக நீக்கப்பட்டால், சில எளிய வழிகளில் மீண்டும் மீட்டெடுக்க முடியும். அது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.

whatsapp

வாட்ஸ்அப் அமைப்புகளில் backup file இயக்கியிருந்தால், உங்கள் சாட்கள் அவ்வப்போது கூகிள் டிரைவ் (ஆண்ட்ராய்டு) அல்லது ஐக்ளவுட் (iOS)-ல் சேமிக்கப்படும். அதில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

இன்ஸ்டா யூஸ் பண்ணுறீங்களா? இனி இதெல்லாம் கட்டாயம் - மெட்டா அதிரடி

இன்ஸ்டா யூஸ் பண்ணுறீங்களா? இனி இதெல்லாம் கட்டாயம் - மெட்டா அதிரடி

எப்படி பெறுவது?

local backup- லிருந்து சாட்களை ரீ ஸ்டோர் செய்யலாம். தொலைபேசியின் பைல் மேனேஜருக்கு சென்று /WhatsApp/Databases/ folder-ஐ திறக்கவும். local backup-ல் தேடவும். -`msgstore-YYYY-MM-DD.1.db.crypt14` தேடுங்கள். அந்தக் கோப்பை `msgstore.db.crypt14` என மறுபெயரிடுங்கள். இப்போது வாட்ஸ்அப்பை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்கையில் 'ரீ ஸ்டோர்' என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

வாட்ஸ்அப்பில் டெலிட் செய்த சாட்களை திரும்ப பெறலாம் - 3 வழிகள் இதோ.. | How To Recover Deleted Whatsapp Chats In Tamil

பேக்கப் பைல் இல்லையென்றால், கடைசி விருப்பமாக Dr.Fone, iMyFone போன்ற மூன்றாம் தரப்பு மீட்பு கருவிகளை முயற்சி செய்யலாம். USB -ஐப் பயன்படுத்தி தொலைபேசியை கணினியுடன் இணைக்கவும். USB பிழைத்திருத்தத்தை இயக்கவும். அப்போது தொலைபேசியை ஸ்கேன் செய்து நீக்கப்பட்ட தரவை மீட்டெடுக்க முயற்சிக்கும். அது வெற்றியடைந்தால், சாட்களை மீட்டெடுக்க முடியும்.