இந்த 4 விஷயங்களை கூகுளில் தேடிடாதீங்க - அப்புறம் வருத்தப்படுவீங்க
கூகுளில் நீங்கள் ஒருபோதும் தேடக்கூடாத விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க..
கூகுள் தேடல்
நாம் ஒரு தகவலை பெற விரும்பினால், அதை கூகுள் உதவியுடன் பெறுகிறோம். ஆனால் கூகுளில் சில விஷயங்களைத் தேடுவது எதிர்பாராத சிக்கல்களில் சிக்கலாம்.
நாம் ஆன்லைனின் என்ன தேடுகிறோம் என்பதை அரசாங்கங்களும், சட்ட அமலாக்க நிறுவனங்களும் உன்னிப்பாகக் கண்காணிக்கின்றன. குறிப்பாக சில தேடல்கள் நேரடி விசாரணைக்கு உட்படுத்தும்.
சட்ட சிக்கல்
அபராதம் செலுத்த வேண்டியிருக்கும், சில சமயங்களில் சிறைக்குக் கூட செல்ல வேண்டியிருக்கும். வெடிகுண்டுகள் அல்லது ஆயுதங்கள் தயாரிப்பதற்கான தகவல்களைப் பெறுவது சட்டவிரோத வேலையாகக் கருதப்படும்.
இது அபராதம் அல்லது கைதுக்கு வழிவகுக்கும். திரைப்படத் திருட்டு, ஆன்லைனில் தேடுவது உட்பட, சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். எந்த வகையான ஹேக்கிங் டூல்ஸ் அல்லது அதன் டுடோரியலைத் தேடுவது கடுமையான சட்ட விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
கருக்கலைப்பு அல்லது குழந்தை ஆபாசப் படங்கள் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தேடினால் கடுமையான தண்டனைகள் உண்டு.