இனி Whatsapp ஸ்டேட்டஸில் நண்பர்களை மென்சன் செய்யலாம் - மெட்டாவின் புதிய திட்டம்
இன்ஸ்டாகிராமை போல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிலும் மற்றவர்களை மென்சன் செய்யும் வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் செயலி உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கு மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2009 ஆம் ஆண்டு வெளியான இந்த செயலியை மெட்டா(பேஸ்புக்) ரூ.1,14,000 கோடிக்கு வாங்கியது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், திரெட்ஸ் ஆகிய சமூக ஊடக செயலிகளின் தாய் நிறுவனம் மெட்டா ஆகும்.
ஸ்டோரி மென்சன்
இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியில் மற்றவர்களை மென்சன் செய்யும் வசதி உள்ளது. மென்சன் செய்பவர்க்கு அந்த நோட்டிபிகேஷன் செல்லும். இந்த வசதியை தற்போது வாட்ஸ்அப்பிலும் கொண்டு வந்து விட்டது.
இனி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் மற்றவர்களை மென்சன் செய்ய முடியும். ஆனால் அதிகபட்சமாக 5 பேரை தான் மென்சன் செய்ய முடியும் என கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், மென்சன் செய்யப்பட்டவரின் இன்பாக்ஸ்க்கு நீங்கள் மென்சன் செய்யப்பட்டுளீர்கள் என உங்கள் ஸ்டேட்டஸின் லிங்க் உடன் தகவல் அனுப்பப்படும்.
மென்சன் செய்யப்பட்டவரை தவிர ஸ்டேட்டஸ் பார்க்கும் மற்ற யாரும் ஸ்டேட்டஸில் யார் மென்சன் செய்யப்பட்டுள்ளார்கள் என பார்க்க முடியாது.
ReShare
இன்ஸ்டாகிராமில் உள்ளது போல் ReShare செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் வாட்ஸ்அப்பில் reshare செய்யும் போது, ஸ்டேட்டஸ் வைத்தவரின் பெயர், புகைப்படம், மொபைல் நம்பர் என எந்த விவரத்தையும் மற்றவர்கள் பார்க்க முடியாது.
இன்ஸ்டாகிராமில் பிறர் நம்மை மென்சன் செய்ய முடியாதவாறு தடுக்கும் வசதி உள்ளது. ஆனால் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் எவரும் ஸ்டோரியில் மென்சன் செய்ய முடியும் என மெட்டா தெரிவித்துள்ளது.மென்சன் செய்யப்படுவதை தவிர்க்க ப்ளாக் செய்யதான் முடியும் என தெரிவித்துள்ளது.
இந்த வசதி தற்போது குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு மட்டும் கிடைக்கும் வகையில் உள்ளது. சில வாரங்களில் மற்ற பயனர்களுக்கு இந்த வசதி கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.