வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - வாய்ஸ் நோட்டில் வந்த முக்கிய அப்டேட்
வாட்ஸ்அப் செயலி வாய்ஸ் நோட்டில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப்
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கு அதிகமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இணையம் மூலம் இலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவது, கால் பேசுவது முதல் பணப்பரிமாற்றம் செய்வது வரை பயனர்களை கவர புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
வாய்ஸ் மெசேஜ்
தற்போது புதிதாக ஒரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு வரும் வாய்ஸ் மெசேஜ்களை (Voice Message) எழுத்து வடிவில் மாற்ற முடியும். இரைச்சல் நிறைந்த சூழலில் இருக்கும்போது வாய்ஸ் மேசேஜை கேட்பதற்குப் பதிலாக இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.
இந்த வசதியைப் பயன்படுத்த, வாட்ஸ்அப் Settings இல் உள்ள Chats பகுதிக்குச் சென்று, வாய்ஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப்ட் ஆப்ஷனை ON செய்ய வேண்டும். அதன் பின், விருப்பமான மொழியையும் தேர்வு செய்து கொள்ளலாம். வாய்ஸ் மெசேஜை நீண்ட நேரம் அழுத்தும்போது தோன்றும் டிரான்ஸ்கிரிப் என்பதைத் தேர்வு செய்து வாய்ஸை எழுத்து வடிவில் மாற்றி கொள்ளலாம்.
சில வாரங்களில் இந்த வசதி உலகம் முழுவதும் உள்ள பயனர்களுக்குக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஆங்கிலம், போர்த்துகீசியம், ஸ்பானிஷ் மற்றும் ரஷ்ய மொழி ஆகிய 4 மொழிகளில் மட்டும் கிடைக்கும் என்றும், பின்னர் வரும் மாதங்களில் கூடுதல் மொழிகள் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.