வீடியோ காலில் வரும் புதிய அம்சங்கள் - whatsapp வெளியிட்டுள்ள அசத்தல் அப்டேட்
வீடியோ அழைப்புகளின் போது புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் வாட்ஸ்அப் இறங்கியுள்ளது.
வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் செயலி உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கு மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இணையவசதி மூலம் இலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவது, கால் பேசுவது முதல் பணப்பரிமாற்றம் செய்வது வரை பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது வீடியோ காலில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் படி வீடியோ கால் அழைப்புகளின் போது AR Filters மற்றும் Effects-ஐ சேர்க்கும் வசதியை அறிமுகப்படுத்தும் முயற்சியில் உள்ளது.
வீடியோ கால்
இந்த புதிய அம்சத்தின் மூலம் நீங்கள் இருக்கும் இடம் மற்றும் மேக்கப் போடவில்லை போன்ற கவலைகள் இல்லாமல் அழைப்புகளை மேற்கொள்ளலாம். நீங்கள் இருக்கும் இடத்தின் பேக்கிரவுண்ட்டை மாற்றிக்கொள்ளலாம். மேலும் பின்னணியை மங்கலாக்கவும், உங்கள் முகத்தை பிரகாசமாக்கவும் வசதி உள்ளது. இதன் மூலம் வீடியோ காலின் போது உங்கள் முகம் தெளிவாக தெரியும்.
AR Filters மூலம் பயனர்கள் வீடியோ அழைப்புகளின் போது மாறும் முக மேலடுக்குகளுடன் தங்கள் தோற்றத்தை மாற்ற அனுமதிக்கிறது.
மேலும் Touch up வசதி மூலம் உங்கள் தோலின் நிறத்தை மாற்ற அனுமதிக்கிறது. இந்த வீடியோ அழைப்புகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட அமைப்புகளை சேமித்து கொள்ளும் வசதி உள்ளது. ஒவ்வொரு அழைப்பின் போதும் தனிப்பயனாக்க வேண்டிய அவசியமில்லை. தற்போது இந்த அம்சங்கள் சோதனை முயற்சியில் உள்ளது.