நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு..என்ன காரணம்? அச்சத்தில் மக்கள்!

Tamil nadu Earthquake Tirunelveli Tenkasi
By Swetha Sep 23, 2024 06:46 AM GMT
Report

நெல்லை தென்காசி பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல் பரவி வருகிறது.

 நில அதிர்வு..

நில நடுக்கம் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், பாபநாசம், மணிமுத்தாறு பகுதிகளிலும், தென்காசி மாவட்டத்தில் முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, வாகைக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு..என்ன காரணம்? அச்சத்தில் மக்கள்! | Whats The Reason For Tenkasi And Nellai Earthquake

காலை 11;55 க்கு வீடுகள் பயங்கர சப்தத்துடன் குலுங்கியதாக கூறிய மக்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி சாலையில் சென்று அமர்ந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கூறுகையில், அபாயத்தை ஏற்படுத்தும் வகையிலான நில அதிர்வுகள் ஏதும் ஏற்பட வில்லை.

ரிக்டர் அளவு கோலில் 1 முதல் 3 வரையிலான லேசான நில அதிர்வுகள் ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் நடக்கும். அவை ரிக்டர் அளவுகோலில் பதிவாகாது.

குறிப்பிட்ட ஆழத்தில் குறிப்பிட்ட வினாடிக்கு நில அதிர்வு நீடித்தால் மட்டுமே ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகும். எனினும் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று கூறினார்.

நெல்லை, தென்காசியில் நில நடுக்கமா? குலுங்கிய வீடுகள்; அலறி ஓடிய மக்கள்

நெல்லை, தென்காசியில் நில நடுக்கமா? குலுங்கிய வீடுகள்; அலறி ஓடிய மக்கள்

என்ன காரணம்?

அதேநேரத்தில் 2 மாவட்டங்களிலும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான டன் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு அண்டை மாநிலமான கேராளவுக்கு எடுத்துச்செல்லப்படுவது தான்இந்த அதிர்வுக்க காரணம் என்று இயற்கை பாதுகாப்பு வள சங்கத்தி னரும், சமூக ஆர்வலர்களும் புகார் கூறுகின்றனர்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு..என்ன காரணம்? அச்சத்தில் மக்கள்! | Whats The Reason For Tenkasi And Nellai Earthquake

நேற்றைய தினம் இயற்கை நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் கனிம வளங்கள் கணக்கில்லாத அளவுக்கு ஆழமாக குவாரிகளில் வெட்டி எடுக்கப்படுகிறது.

ஆலங்குளம், கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போர் எந்திரம் உபயோகித்து துளை இட்டு பாறைகளை தகர்த்து எடுக்கின்றனர். அனுமதிக்கப்பட்ட அளவை விட குவாரிகளில் பாறைகளை எடுத்துவிட்டு, மீண்டும் ஆழம் தெரியாமல் இருக்க மண் நிரப்பி விடுகின்றனர்.

எனவே குவாரிகளை எல்லாம் அரசு உடனடியாக ஆய்வு செய்து அதி திறன் கொண்ட வெடிபொருட்களை உபயோகப்படுத்துவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.