முதல் முதலாக பயன்படுத்திய செல்போன் - ஒரு நிமிடம் பேச எவ்வளவு கட்டணம் தெரியுமா?
29 ஆண்டுகளுக்கு முன்பாக செல்போனில் பேச கட்டணம் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
செல்போன்
இந்தியாவில் செல்போன் டெலிகாம் தொழில் நுட்பம் அபார வளர்ச்சி அடைந்துள்ளது. முன்பெல்லாம் ஒரு லேண்ட் லைன் இருந்த காலம் முடிந்து, ஆளுக்கொரு செல்போன்களை வைத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் இந்தியாவில் முதன் முதலாக செல்போன் அழைப்பு 29 ஆண்டுகளுக்கு முன்பாக பேசப்பட்டபோது அதன் டாரிஃப் மிக அதிகமாக இருந்தது. 1995 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி இந்திய டெலி கம்யூனிகேஷன் வரலாற்றில் முக்கியமான நாளாகும்.
ஏனென்றால் அன்றுதான் முதல் செல் போன் அழைப்பை நோக்கியா போனை பயன்படுத்தி அப்போதைய மேற்கு வங்க முதல்வர் ஜோதி பாசு, அன்றைய மத்திய தகவல் அமைச்சர் சுக்ராமிற்கு பேசினார். அன்றைய சூழலில், மோடி – டெல்ஸ்ட்ரா நெட்வொர்க் என்ற நிறுவனம் செல்போன் கம்யுனிகேஷனை நடத்தி வந்தது.
கட்டணம்?
இந்தியாவின் பி.கே. மோடி மற்றும் ஆஸ்திரேலியாவின் டெல்ஸ்ட்ரா நிறுவனங்களின் கூட்டு அமைப்பாக இந்த மோடிடெல்ஸ்ட்ரா செயல்பட்டது. இந்த முதல் நெட்வொர்க் கொல்கத்தாவையும், டெல்லியையும் இணைத்தது.
அப்போது, அவுட் கோயிங் மற்றும் அவுட் கோயிங் கால் நிமிடத்திற்கு ரூ. 8.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பீக் நேரத்தில் நிமிடத்திற்கு ரூ. 16.80 ஆக வசூலிக்கப்பட்டது. பண மதிப்பு சற்று அதிகம் இருந்த அந்த கால கட்டத்தில், இந்த செல்போன் பில் மிக செலவு மிக்கதாக பார்க்கப்பட்டது.
அதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக செல்போன் டெலிகாம் வளர்ச்சியடைந்து, இன்றைக்கு 4ஜி, 5ஜி, ஒன் இயர் ப்ளான்கள், அனைத்து ப்ளான்களுக்கும் அன்லிமிட்டெட் கால் வசதி என மாற்றங்கள் நடந்துள்ளன.