டவரே வேண்டாம்.. செயற்கைகோள் மூலம் செல்போனில் பேசலாம் - புதிய சாதனை!

China Satellites World
By Jiyath Apr 16, 2024 06:31 AM GMT
Report

செயற்கைக்கோள் மூலம் செல்போன்களில் பேசும் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீனா ஆய்வு

செயற்கை கோள் மூலமாக ஸ்மார்ட் போன்களில் பேசும் வசதியை கொண்டு வர சீனா ஆய்வு மேற்கொண்டது. இதன் மூலம் டவர்கள் இல்லாமல் செல்போன்களில் பேசலாம்.

டவரே வேண்டாம்.. செயற்கைகோள் மூலம் செல்போனில் பேசலாம் - புதிய சாதனை! | Power Cell Phones Through Satellites Without Tower

இதற்காக கடந்த 2016-ம் ஆண்டு டியான்டாங்-1 என்ற செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி சோதனை நடத்தி வந்தது. இந்நிலையில் இந்த முதல் சோதனையில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட் பரிசோதகருடன் தகராறு - ஆத்திரத்தில் பெண் பயணி செய்த காரியம்!

ரயில் டிக்கெட் பரிசோதகருடன் தகராறு - ஆத்திரத்தில் பெண் பயணி செய்த காரியம்!

புதிய சாதனை

மேலும், ஸ்மார்ட் போன் தகவல் தொடர்பு அமைப்பில், செயற்கைக் கோள் இணைப்பை அடைவதில் சீன விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

டவரே வேண்டாம்.. செயற்கைகோள் மூலம் செல்போனில் பேசலாம் - புதிய சாதனை! | Power Cell Phones Through Satellites Without Tower

இதன்மூலம் ஆசியா - பசிபிக் பிராந்தியம் முழுவதும் செயற்கைக்கோள்கள் வழியாகவே ஸ்மார்ட்போன்களில் பேச முடியும். இதனால் நிலநடுக்கம், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது கூட தொலைத் தொடர்பு இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.