வாரத்தில் 2 நாள் மட்டும் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்? இதை அவசியம் தெரிஞ்சுகோங்க..!

World
By Swetha Sep 27, 2024 04:30 PM GMT
Report

வாரத்தில் ஒன்று அல்லது 2 நாட்கள் தீவிர உடற்பயிற்சி செய்தால் என்ன பயன் என்று தெரிந்துகொள்ளலாம்.

 உடற்பயிற்சி

ஒரு வாரத்தில் 2 நாட்கள் தீவிர உடற்பயிற்சி செய்தாலே போதும்... 200 வகை நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறையும் என்கிறது அமெரிக்க மருத்துவ சங்க இதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரை.

வாரத்தில் 2 நாள் மட்டும் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்? இதை அவசியம் தெரிஞ்சுகோங்க..! | Whats The Benefits Of Excersicing Weekly Twice

அதாவது, மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஷான் குர்ஷித் என்பவர் ஆய்வு அடிப்படையில் இக்கட்டுரை வெளியாகியுள்ளது.

ஜிம்முக்கு செல்லும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுகிறதா..? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

ஜிம்முக்கு செல்லும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுகிறதா..? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

வாரத்தில்.. 

அதில், வாரத்தின் 7 நாட்களும் தினசரி 20 முதல் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதில் கிடைக்கும் பலனானது, வாரத்தில் ஒன்று அல்லது 2 நாட்கள் 150 நிமிடம் உடற்பயிற்சி செய்வதிலேயே கிடைத்துவிடும்" என கூறப்பட்டுள்ளது.

வாரத்தில் 2 நாள் மட்டும் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்? இதை அவசியம் தெரிஞ்சுகோங்க..! | Whats The Benefits Of Excersicing Weekly Twice

மேலும், இருதய பாதிப்பு, பக்கவாத பாதிப்பு வாய்ப்புகள் இந்த தீவிர பயிற்சியால் வெகுவாக குறையும் என்கிறது கட்டுரை. 90 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இது தெரியவந்துள்ளதாக அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.