ஜிம்முக்கு செல்லும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுகிறதா..? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

United Kingdom England World
By Jiyath Nov 30, 2023 06:34 AM GMT
Report

உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லும் இளைஞர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஆண்மைக்குறைவு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

ஆண்மைக் குறைவு 

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும், உடல் எடையை அதிகரிக்கவும் குறைக்கவும் பலர் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்கின்றனர். அதில் ஆண்கள் பெரும்பாலாக செல்கின்றனர்.

ஜிம்முக்கு செல்லும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுகிறதா..? ஆய்வில் அதிர்ச்சி தகவல்! | Male Gym Goers Consider Impact On Fertility

இந்நிலையில் உடற்பயிற்சிக் கூடங்களுக்கு செல்லும் இளைஞர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஆண்மைக்குறைவு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. Reproductive BioMedicine Online என்ற இணையதளத்தில் இது தொடர்பான ஆய்வு வெளியிடப்பட்டுள்ளன. அந்த ஆய்வில் 152 உடற்பயிற்சி ஆர்வலர்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் முடிவுகள் இடம்பெற்றுள்ளன.

அதில், ஜிம்முக்கு செல்லும் 79% ஆண்கள் உட்கொள்ளும் ஈஸ்ட்ரோஜன் அடங்கிய புரதச்சத்து பொருட்களால் அவர்களது வாழ்க்கையில் ஆண்மைக்குறைவு பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, பாதிக்கும் மேற்பட்டவர்கள் (52%) இதைப்பற்றி முன்பே யோசித்ததாக கூறியுள்ளனர். ஆனால் அவர்களில் 14% பேர் மட்டுமே ஜிம்மில் செய்யும் உடற்பயிற்சி செயல்பாடுகளால் குழந்தை பிறப்பதில் பிரச்சினை ஏற்படலாம் என்று கருதியுள்ளனர்.

அதிர்ச்சி தகவல் 

38% உடன்படவில்லை மற்றும் 28% உடன்படிக்கையுடன், ஆண்மைக்குறைவு பிரச்சினையைக் காட்டிலும் ஜிம் உடற்பயிற்சி முக்கியம் என்று நினைக்கிறீர்களா என்று கேட்கப்பட்டபோது, 38 சதவீதம் பேர் இல்லை என்றும் 28 சதவீதம் பேர் ஆம் என்றும் கூறியுள்ளனர்.

ஜிம்முக்கு செல்லும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுகிறதா..? ஆய்வில் அதிர்ச்சி தகவல்! | Male Gym Goers Consider Impact On Fertility

இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரும், பர்மிங்காம் பல்கலைக்கழக ஆய்வாளருமான டாக்டர். மியூரிக் கல்லாகர், இது தொடர்பாக கூறியதாவது "ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கொண்டிருப்பது ஒரு நல்ல விஷயம். ஆண்களைப் பொறுத்துவரை புரதச்சத்துக்களின் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. அவற்றில் பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் அதிக அளவு இருக்கிறது. அதிகப்படியான பெண் ஹார்மோன், ஒரு ஆணில் உற்பத்தியாகும் விந்தணுவின் அளவு மற்றும் தரத்தைப் பாதிக்கும்.

இதனால், ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைதல், விந்தணுக்கள் சுருங்குதல் மற்றும் விறைப்புச் செயலிழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுத்தும்" என அவர் தெரிவித்துள்ளார். மேலும், "மலட்டுத்தன்மை என்பது அதிகரித்து வரும் கவலைக்குரிய பிரச்சனையாகும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி உலகளவில் 6 பேரில் ஒருவருக்கு இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது" என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.