அம்பானி வீட்டு திருமணம்...ஊழியர்களுக்கு வழங்கிய gift box-ல் என்ன இருந்தது தெரியுமா?

Viral Video Marriage Anant Ambani Radhika Merchant
By Swetha Jul 12, 2024 05:42 AM GMT
Report

ஊழியர்களுக்கு அம்பானி குடும்பத்தினர் அளித்த பரிசு வீடியோ வைரலாகியுள்ளது.

அம்பானி வீட்டு விழா

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்டின் திருமணம் மும்பையில் நடைபெற உள்ளது.இதற்கான பல ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களது திருமண கொண்டாட்டங்கள் தான் தற்போது இந்தியாவின் ஹாட் டாபிக்காக மாறுமளவிற்கு பேசுபொருளாகியுள்ளது.

அம்பானி வீட்டு திருமணம்...ஊழியர்களுக்கு வழங்கிய gift box-ல் என்ன இருந்தது தெரியுமா? | Whats Inside Wedding Gift Given By Ambani Family

முன்னதாக திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் குஜராத் மாநிலம் ஜாம்நகரிலும், வெளிநாடுகளிலும் நடைபெற்றன. இந்த வார தொடக்கத்தில் சங்கீத் நிகழ்ச்சியும் நடந்தது. இந்த கொண்டாட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரபலங்களின் ஆடைகள், புகைப்படங்கள் என அவ்வப்போது ஏதேனும் ஒன்று வைரலாகி வருகிறது.

அம்பானி வீட்டு திருமணம்; பலபேர் முன் ரஜினி செய்த செயல் - சர்ச்சையாகும் வீடியோ!

அம்பானி வீட்டு திருமணம்; பலபேர் முன் ரஜினி செய்த செயல் - சர்ச்சையாகும் வீடியோ!

 என்ன இருந்தது?

அதிலும் அம்பானி குடும்பத்தினர் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் நகைகள் பெரிதும் கவனம் பெற்றது. இந்த நிலையில், இந்த திருமணத்தையொட்டி, ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கிப்ஸ் பாக்ஸ் ஒன்று வைரலாகியுள்ளது.

அம்பானி வீட்டு திருமணம்...ஊழியர்களுக்கு வழங்கிய gift box-ல் என்ன இருந்தது தெரியுமா? | Whats Inside Wedding Gift Given By Ambani Family

அந்த பாக்ஸில் உள்ள பொருட்களை ஊழியர்கள் பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.அதில் இனிப்புகள், மிக்சர் வகைகள், வெள்ளி நாணயம் போன்றவை இடம்பெற்றுள்ளது.