அம்பானி வீட்டு திருமணம்; பலபேர் முன் ரஜினி செய்த செயல் - சர்ச்சையாகும் வீடியோ!
அம்பானி வீட்டு திருமணத்தில் ரஜினி கலந்துக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ரஜினி பங்கேற்பு
உலக அளவில் 11வது பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி. சுமார் 9,43,091 கோடி ரூபாய் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளார்.
இவரது இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமன முந்தைய சடங்குகள் மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸில் நடைபெற்றது.
1000 ஏக்கர் பரப்பளவில் காடு, புனரமைக்கப்பட்ட சாலைகள், சுமார் 2,500 உணவு வகைகள் என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வீடியோவால் சர்ச்சை
ப்ரீ வெட்டிங்கில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், சஞ்சய் தத், அபிஷேக் பச்சன், ராம் சரண், சயீப் அலிகான், ரன்பீர் சிங், ரன்வீர் சிங், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், தீபிகா படுகோன், சாரா அலிகான், அலியா பட்,ஜான்வி கபூர், கேத்ரினா கைஃப்,இயக்குநர் அட்லி என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Just Look at the way, the helper woman is Treated..!! ?
— . (@Reddington94_) March 3, 2024
Avanga kuda lan Photo eduthuka maatingala sir? @rajinikanth pic.twitter.com/lMqUGbtWcJ
இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினி அவரது குடும்பத்துடன் திருமண விழாவில் கலந்துக்கொண்டுள்ளார். அப்போது, ரஜினி அவரது குடும்பத்துடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க நிற்கும்போது, அவர்கள் உடன் வந்த ஒரு பெண்ணும் அங்கே அவர்களுடனே வர, ஜினி அவரை போ போ என கையசைத்து தள்ளிப்போய் நிற்க சொல்கிறார்.
ரஜினியின் இந்த செயலை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.