பரபரக்கும் கூட்டணி பிரச்சனை...கூடும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...என்ன செய்வார் இபிஎஸ்..?

ADMK BJP K. Annamalai Edappadi K. Palaniswami D. Jayakumar
By Karthick Sep 24, 2023 01:00 PM GMT
Report

அதிமுக - பாஜக கூட்டணி பிரச்சனை அதிகளவில் விவாதிக்கப்பட்டு வரும் சூழலில், நாளை கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

கூட்டணி பிரச்சனை  

அண்ணாவை விமர்சித்ததில் துவங்கி அதிமுக - பாஜக கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றது. ஜெயக்குமார் கூட்டணி இல்லை என அதிரடியாக அறிவித்த நிலையில், கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

what-will-be-decided-in-admk-meeting

அதே நேரத்தில் பொள்ளாச்சியில் என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் போது பேசிய அண்ணாமலை, சிலரை எதிர்க்க தான் தயாராகி விட்டதாக அதிரடியாக கூறி, அதே நிலைப்பாட்டை தான் பாஜகவும் எடுக்கும் என தனது நிலைப்பாட்டை மறைமுகமாக தெரிவித்தார்.

அதிமுக பாஜக கட்சிகளுக்கிடையே பிரச்சனை இல்லை - அண்ணாமலை விளக்கம்!!

அதிமுக பாஜக கட்சிகளுக்கிடையே பிரச்சனை இல்லை - அண்ணாமலை விளக்கம்!!

என்ன முடிவெடுக்கும் அதிமுக

இந்நிலையில், நாளை அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில் நாளை அவசரமாக கூட்டம் கூட்டப்படும் நிலையில், இதில் அதிமுக தரப்பில் கூட்டணி குறித்தே முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

what-will-be-decided-in-admk-meeting

தேர்தலின் போது, கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என ஜெயக்குமார் கூறியதும், அண்ணாமலை மாற்றப்படுவேண்டும் என அதிமுகவின் முக்கிய தலைவர்கள் டெல்லி தேசிய தலைவர்களிடம் வலியுறுத்தியிருப்பதாக கூறியதாக கூறப்படும் நிலையில், அதிமுக தலைமை இது குறித்து எந்தவித அதிகாரபூர்வ தகவலையும் இது வரை இதில் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.