தியாகம் செய்தா சிறைக்கு சென்றார் செந்தில் பாலாஜி? அவர்களை எதில் சேர்ப்பது..சீமான் கேள்வி!
செந்தில் பாலாஜி தியாகம் செய்தா சிறைக்கு சென்றார் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தியாகம் செய்தாரா?
செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளதற்கு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
செந்தில் பாலாஜியின் தியாகம் பெரியது என்று கூறியிருந்தார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார். இது குறித்து சீமான் கூறியதாவது, செந்தில் பாலாஜி தியாகம் செய்துவிட்டா சிறைக்கு சென்றார்.
சீமான் கேள்வி
செந்தில் பாலாஜி செய்தது தியாகம் என்றால்.. நாட்டுக்காக தியாகம் செய்து விட்டு சிறைக்கு சென்றவர்களை எந்த பட்டியலில் சேர்ப்பது? செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றதே திமுக போட்ட வழக்கில்தான்"என்றார்.
மேலும், விஜய் பெரியாருக்கு மரியாதை செலுத்தியது குறித்து பேசிய சீமான், பெரியாருக்கு மாலையிட்டதால் திராவிடக் கொள்கையை விஜய் கையில் எடுப்பதாக அர்த்தமா? என்றும் கேள்வி எழுப்பினார்.