TN 07 CM 2026 என நம்பர் பிளேட் வைத்ததற்கு என்ன காரணம்? புஸ்ஸி ஆனந்த் விளக்கம்!

Vijay Tamil nadu Chennai GOAT
By Swetha Sep 06, 2024 03:30 PM GMT
Report

விஜய் காரில் TN 07 CM 2026 என நம்பர் பிளேட் வைத்தது குறித்து புஸ்ஸி ஆனந்த் விளக்கமளித்துள்ளார்.

நம்பர் பிளேட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

TN 07 CM 2026 என நம்பர் பிளேட் வைத்ததற்கு என்ன காரணம்? புஸ்ஸி ஆனந்த் விளக்கம்! | What Reason For Tn 07 Cm 2026 Number Plate

அந்த படத்தில் விஜய் பயன்படுத்தும் காரில் TN 07 CM 2026 என நம்பர் பிளேட் வைக்கப்பட்டுள்ளது. 2026 இல் விஜய் தமிழக முதலமைச்சர் ஆவார் என்பதை குறிக்கும் விதமாக இந்த நம்பர் பிளேட் வைக்கப்பட்டுள்ளதா?

உள்ளாட்சி தேர்தலில் தவெக.. சீமான் விஜய் கூட்டணி ? - புஸ்ஸி ஆனந்த் பரபரப்பு பதில்

உள்ளாட்சி தேர்தலில் தவெக.. சீமான் விஜய் கூட்டணி ? - புஸ்ஸி ஆனந்த் பரபரப்பு பதில்

புஸ்ஸி ஆனந்த்

என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், கிண்டியில் அமைந்திருக்கும் காந்தி மண்டபத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வருகை தந்தார்.

TN 07 CM 2026 என நம்பர் பிளேட் வைத்ததற்கு என்ன காரணம்? புஸ்ஸி ஆனந்த் விளக்கம்! | What Reason For Tn 07 Cm 2026 Number Plate

அப்போது அவரிடம் செய்தியாளர்கள், 'தி கோட்' படத்தில் TN 07 CM 2026 என நம்பர் பிளேட் வைத்தது ஏன்? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், அதைநோக்கி தானே எங்களது கட்சி பயணம் உள்ளது" என்று தெரிவித்தார்.