உள்ளாட்சி தேர்தலில் தவெக.. சீமான் விஜய் கூட்டணி ? - புஸ்ஸி ஆனந்த் பரபரப்பு பதில்

Vijay Naam tamilar kachchi Tamil nadu Seeman Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Jun 09, 2024 11:04 AM GMT
Report

 தவெக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சில மாதங்களுக்கு முன் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். தனது 69-வது படத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு முழு நேர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்து இருந்தார்.

vijay tvk party membership

கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிடும் என்று நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.

சீமானுக்கு வாழ்த்து

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில்,   மாநில கட்சி அங்கீகாரம் பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் நடிகர் விஜய். அதன் பிறகு சீமான் தனக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார்.

seeman

இதற்கு முன்பே, விஜய் உடன் கூட்டணி வைப்பீர்களா என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானிடம் கேள்வி எழுப்பிய போது I am Waiting என பதிலளித்தார். தற்போது விஜய் வாழ்த்து தெரிவித்த நிலையில், நாம் தமிழர் கட்சியுடன் நடிகர் விஜய் 2026 தேர்தலில் கூட்டணி அமைப்பார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

2026-ல் தவெகவுடன் கூட்டணியா? விஜய் பாணியிலேயே அதிரடி பதிலளித்த சீமான்!

2026-ல் தவெகவுடன் கூட்டணியா? விஜய் பாணியிலேயே அதிரடி பதிலளித்த சீமான்!

சீமான் விஜய் கூட்டணி

இதற்கு தற்போது தவெக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, சீமானுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக கட்சியின் தலைவர் விஜய் தான் முடிவு செய்வார். சட்டசபை தேர்தல் வருவதற்கு இன்னும் 2 வருடங்கள் இருப்பதால் யாரும் அவசரப்பட வேண்டாம்.

bussy anand

அதேபோல், உள்ளாட்சி தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுமா என்பதை விஜய் அறிவிப்பார். அதன் பிறகு வருகின்ற 18ம் தேதி தவெக நிர்வாகிகள் கூட்டம் எதுவும் நடத்த திட்டமிடப்படவில்லை என்று கூறியுள்ளார்.