அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் - ஆய்வு நடத்த உளவுத்துறையினருக்கு உத்தரவு..!
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள மாவட்ட உளவுத்துறையினருக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆளுநருக்கு முதலமைச்சர் பரிந்துரை
அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி 2-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வந்த துறைகள் வேறு அமைச்சர்களுக்கு மாற்ற ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின் துறையும், அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு ஆய தீர்வை துறையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உளவுத்துறைக்கு அரசு உத்தரவு
இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிய மாவட்டங்களில் உள்ள உளவுத்துறையினர் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும் திமுக அரசின் செயல்பாடு? மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு தொடர்பாக கருத்து கேட்கவும்,
கடந்த அதிமுக ஆட்சிக்கும் தற்போதைய திமுக ஆட்சிக்கும் ஒப்பீடு குறித்து மக்களிடம் கருத்து கேட்கவும், மாநில அரசு மீது மத்திய அரசு ஆதிக்கம் செலுத்த முயல்கிறதா என்பது குறித்து மக்களின் கருத்தை கேட்கவும் முடிவு.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்தனி உளவுத்துறை பொறுப்பாளர்களை நியமித்து கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.