திமுகவினரை சீண்டி பார்க்க வேண்டாம்...எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin V. Senthil Balaji DMK BJP
By Thahir Jun 15, 2023 07:49 AM GMT
Report

திமுகவினரை சீண்டி பார்க்க வேண்டாம் எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதைவிட அபட்டமான அரசியல் பழிவாங்கல் இருக்க முடியுமா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், செந்தில் பாலாஜி மீதான் நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்பதில் யாருக்கும் கொஞ்சம் கூட சந்தேகமில்லை.

We also know all the politics M k Stalin

10 ஆண்டுக்கு முன்னர் உள்ள பழைய புகாரை வைத்து 18 மணி நேரம் அடைத்து வைத்து மன அழுத்தம் கொடுத்து, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், பலவீனப்படுத்தி உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இருத நோயை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால் இதைவிட அபட்டமான அரசியல் பழிவாங்கல் இருக்க முடியுமா?

செந்தில் பாலாஜி மீது புகார் இருந்தால் அது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு இருக்கும் என்றால் அவரை அழைத்து விசாரணை நடத்துவதை தவறு என்று சொல்லவில்லை.

அறிவிக்கப்படாத எமர்ஜென்சில நாடு இருக்கா?

ஓடி, ஒளிய கூடிய அளவுக்கு அவர் சாதாரணமானவர் அல்ல. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ. அதுவும் 5 முறை எம்எல்ஏவாக இருக்கிறார்.

2வது முறையாக அமைச்சராக இருக்கிறார். நாள்தோறும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 

அப்படி பட்டவர் ஏதோ தீவிரவாதியை போல அடைத்து வைத்து விசாரிக்க என்ன அவசியம் இருக்கு? அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்த போது முழு ஒத்துழைப்பு தந்தார்.

எந்த ஆவணங்கள் எடுத்து இருந்தாலும் அது தொடர்பாக விளக்கம் அளிக்க தயார் என்று சொல்லியிருந்தார். அதற்கு பிறகும் 18 மணி நேரமா அடைத்து வைத்திருந்தாங்க..யாரையும் சந்திக்க அனுமதியில்லை.

இறுதியா அவருக்கு உடல் நலம் முழுமையா பாதிக்கப்பட்டு இதய வலி அதிகம் ஆனா பின்னர் தான் மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

அதுலையும் அலட்சியம் காட்டியிருந்தால் அவருடைய உயிருக்கே ஆபத்தாக போயிருக்கும். இப்படி ஒரு விசாரணையை மேற்கொள்ள அப்படி என்ன ஒரு எமர்ஜென்சி. அறிவிக்கப்படாத எமர்ஜென்சில நாடு இருக்கா? அப்படி தான் இருக்கு அமலாக்கத்துறையின் நடவடிக்கை