செந்தில் பாலாஜியின் உடல் நலம் குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை

M K Stalin V. Senthil Balaji Government of Tamil Nadu
By Thahir Jun 14, 2023 04:56 AM GMT
Report

கைது செய்யப்பட்டு நெஞ்சுவலி காரணமாக ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நலம் குறித்து விசாரிக்க நேரில் வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அமலாக்கத்துறை சோதனை 

தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜின் வீடு, தலைமை செயலக அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சுமார் 18 மணிநேரம் சோதனை நடத்தி பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்து அழைத்து செல்லப்பட்டார்.

அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை, ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நலம் குறித்து அதிகாலை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, எ.வ.வேலு, ரகுபதி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

m-k-stalin-came-to-the-hospital

இதை தொடர்ந்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நலன் குறித்து விசாரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.

செந்தில் பாலாஜியின் உடல் நலம் குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை | M K Stalin Came To The Hospital