தவெக மாநாடு.. பெரியார், காமராஜர், அம்பேத்கர் வரிசையில் விஜய் கட் அவுட் - நோக்கம் என்ன?

Vijay Periyar E. V. Ramasamy Viluppuram Thamizhaga Vetri Kazhagam
By Swetha Oct 24, 2024 09:00 AM GMT
Report

தவெக மாநாட்டு திடலில் பெரியார், காமராஜர், அம்பேத்கர் கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

கட் அவுட் 

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெக மாநாடு.. பெரியார், காமராஜர், அம்பேத்கர் வரிசையில் விஜய் கட் அவுட் - நோக்கம் என்ன? | What Is Vijays Intention In Keeping Legends Banner

இந்த நிலையில், மாநாட்டு திடலில் வைக்கப்பட்டு இருந்த பெரியார், காமராஜர், அம்பேத்கர் மற்றும் விஜய்யின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் இடம் பெற்றுள்ளதை பார்த்து, அரசியல் விமர்சகர்களை ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தவெக மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி இல்லை; நேரம் இதுதான் - விஜய் தரப்பில் பதில்

தவெக மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி இல்லை; நேரம் இதுதான் - விஜய் தரப்பில் பதில்

நோக்கம் என்ன?

ஏனெனில், திமுக எப்போதுமே பெரியாரின் கொள்கையை கடைபிடித்து வருவதை அடுத்து, திமுகவுக்கு போட்டியாக தான் களமிறங்க உள்ளதை மறைமுகமாக கூறுவதற்காக விஜய், பெரியாரின் கட்-அவுட்டுக்களை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

தவெக மாநாடு.. பெரியார், காமராஜர், அம்பேத்கர் வரிசையில் விஜய் கட் அவுட் - நோக்கம் என்ன? | What Is Vijays Intention In Keeping Legends Banner

அதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சியுடன் நல்லுறவில் இருப்பதை காட்டுவதற்காக காமராஜர் கட்-அவுட்டை வைத்திருப்பதாகவும், பட்டியல் இன மக்களின் ஆதரவை முழுமையாக பெறுவதற்காக அம்பேத்கரின் கட்-அவுட்டை வைத்திருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எனவே இந்த கட்-அவுட்டுக்கள் பெரும் பேசுப்பொருளாக உருமாறியுள்ளது. மேலும், இந்த மாநாட்டில் விஜய் தனது கட்சியின் கொள்கைகளை முழுமையாக அறிவிப்பார் என்றும் சுமார் 2 மணி நேரம் அவர் பேச இருப்பதாகவும் கூறப்படுகின்றது.