இந்திய பிரதமர், குடியரசு தலைவரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? விவரம் இதோ!

Narendra Modi India Draupadi Murmu Lok Sabha Election 2024
By Swetha Jun 10, 2024 04:01 AM GMT
Report

பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் ஆகியோரின் சம்பளம் விவரம் குறித்து பார்க்கலாம்.

 மாத சம்பளம் 

நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவுகள் வெளியானது. அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது.அதிலும், பா.ஜ.க தனிப்பெரும்பான்மைக்கான இடங்களை தொடாமல் 240 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.

இந்திய பிரதமர், குடியரசு தலைவரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? விவரம் இதோ! | What Is The Salary Of Indias Pm And President

இந்தியா கூட்டணி 230 இடங்களை கைபற்றியது.பல்வேறு குழப்பங்களுக்கு அடுத்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மூன்றாம் முறையாக நரேந்திர மோடி பதவியை தக்கவைத்துளார். அந்த வகையில், நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில்

மோடி மீண்டும் பதவியேற்றுக்கொண்டார்.அங்கு அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். மேலும், அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த நிலையில், 2018ல், இந்திய அதிபரின் மாதச் சம்பளம் ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, தமது வரவு செலவுத் திட்ட அறிக்கையின்போது சம்பள உயர்வை அறிவித்திருந்தார்.

'நரேந்திர தாமோதர தாஸ் மோடி ஆகிய நான்' - பிரதமராக பதவியேற்றார் மோடி!

'நரேந்திர தாமோதர தாஸ் மோடி ஆகிய நான்' - பிரதமராக பதவியேற்றார் மோடி!

விவரம் இதோ

இந்திய அதிபரின் சம்பளம் கடைசியாக 2006 ஜனவரியில் மாற்றி அமைக்கப்பட்டதாக அவர் அப்போது கூறியிருந்தார்.விமானத்திலும் ரயிலிலும் இந்தியாவில் எங்கு வேண்டுமென்றாலும் அதிபர் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம். அதிபர் தம்முடன் சேர்த்து ஒருவரை அழைத்துச் செல்லலாம்.

இந்திய பிரதமர், குடியரசு தலைவரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? விவரம் இதோ! | What Is The Salary Of Indias Pm And President

அவருக்கான செலவும் ஏற்றுக்கொள்ளப்படும். இதையடுத்து, இந்திய துணை அதிபரின் மாதச் சம்பளம் ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்படுவதாக திரு ஜெட்லி ஆற்றிய அதே வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, இந்தியப் பிரதமருக்கு மாதச் சம்பளமாக ரூ.1.66 லட்சம் கிடைப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிரதமரின் பாதுகாப்பை உறுதிசெய்ய, தனிப்பட்ட சிறப்புப் பாதுகாப்புக் குழு எல்லா நேரமும் பணியில் ஈடுபடுத்தப்படும்.

பிரதமரின் அதிகாரபூர்வப் பயணங்களுக்காக ஏர் இந்தியா ஒன் பிரத்தியேக விமானம் சேவை வழங்கும்.தலைநகர் புதுடெல்லியில் உள்ள எண் 7 ரேஸ் கோர்ஸ் ரோடு, பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமாக விளங்குகிறது.