ருதுராஜ் செய்த காரியம்;மாற்றப்பட்ட பேட்டிங் ஆர்டர்- csk தோல்விக்கு காரணம் என்ன?

Chennai Super Kings IPL 2024
By Swetha Apr 20, 2024 04:48 AM GMT
Report

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி செய்த தவறுகளே தோல்வி அடையா காரணமாக அமைந்துள்ளது.

csk தோல்வி 

இந்த ஆண்டின் ஐபிஎல் சீசன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ருதுராஜ் செய்த காரியம்;மாற்றப்பட்ட பேட்டிங் ஆர்டர்- csk தோல்விக்கு காரணம் என்ன? | What Is The Reason For The Loss Of Csk Against Lsg

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.பிறகு சேஸ் செய்த லக்னோ அணி 19 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களை பெற்று வெற்றி அடைந்தது. இந்த சீசனில் இதுவரை சிஎஸ்கே அணி விளையாடியதில் 3வது தோல்வி இதுவே ஆகும்.

இம்முறை அணியின் தோல்விக்கு அவர்கள் செய்த தவறுகளே காரணமாக அமைந்துள்ளது. பேட்டிங்கின் போது பவர் பிளே ஓவர்களிலே ரச்சின் ரவீந்திரா டக் அவுட் ஆகி வெளியேறினார்.அடுத்ததாக ரஹானே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

தோனி அது செய்வது கஷ்டம்; நான் ரிஷப் பண்டை தான் அழைப்பேன்- ரோகித் சர்மா ஓபன் டாக்!

தோனி அது செய்வது கஷ்டம்; நான் ரிஷப் பண்டை தான் அழைப்பேன்- ரோகித் சர்மா ஓபன் டாக்!

பேட்டிங் ஆர்டர் 

இதன் காரணமாக பவர் பிளே ஓவர்களில் நல்ல ரன்கள் இருப்பினும், தொடர் விக்கெட் இழப்பினால் ஜடேஜாவை நம்பர் 4ல் களமிறக்க வேண்டிய தேவை எழுந்தது. அதே சமயத்தில் தொடக்க வீரராக ருதுராஜூக்கு பதிலாக ரஹானே ஆடுவது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

ருதுராஜ் செய்த காரியம்;மாற்றப்பட்ட பேட்டிங் ஆர்டர்- csk தோல்விக்கு காரணம் என்ன? | What Is The Reason For The Loss Of Csk Against Lsg

இந்த மாற்றத்தால் முதல் 7 ஓவர்களுக்குள் கட்டாயம் சிஎஸ்கே அணி 2 விக்கெட்டுகளை இழக்கும் என்று முன்பே கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு அணியும் சிவம் துபேவுக்கு எதிராக கொஞ்சம் தயாராகி வருவதால், எதிர்முனையில் நின்று அட்டாக் செய்யும் மற்றொரு வீரரின் தேவை எழுந்துள்ளது.

அதேபோல் நேற்று 4 விக்கெட்டுகளை சிஎஸ்கே அணி இழந்த போது, உடனடியாக தோனியை களமிறக்காமல் இம்பேக்ட் பிளேயராக சமீர் ரிஸ்வியை களமிறக்கியது மிகப்பெரிய பின்னடைவாகியுள்ளது. கிட்டத்தட்ட சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டரே ஒட்டுமொத்தமாக மாற்றப்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.