பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் உங்களது plan B என்ன? அமித் ஷா செம்ம பதில்!
தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அடுத்த பிளான் என்ன என்று அமித் ஷா கூறியுள்ளார்.
பாஜக plan B
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. அதில் ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 ஆகிய நாட்களில் 2 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், 3-ஆம் கட்ட தேர்தலும் நிறைவடைந்தது.
எஞ்சிய வாக்குப்பதிவு கட்டங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் முக்கிய தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தீவிர வாக்குப்பதிவில் ஈடுபட்டுள்ளனர்.
பாஜக மீண்டும் ஆட்சியமைப்பதா கூடாதா என்பதுதான் தேர்தலின் மையப்புள்ளியாக அமைந்துள்ளது. கூட்டணியாக 400 இடங்கள், பாஜகவுக்கு மட்டும் 370 இடங்கள் என்ற வெற்றிக் கணக்குடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்பது பாஜகவின் பெரும் நம்பிக்கையாக இருக்கிறது.
அமித் ஷா பதில்
ஒருவேளை பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பாஜகவின் அடுத்த திட்டம் என்ன என்ற முக்கிய கேள்வி எழுகிறது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், அப்படி பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது போவதற்கான வாய்ப்பே இல்லையென்றும் பிளான் பி என்பதற்கான அவசியமும் இல்லை என்றார்.
தொடர்ந்து,பாஜக பெரும்பான்மை இழப்பதற்கான சாத்தியக்கூறுகள் எதையும் நான் காணவில்லை. 60 கோடி பலம் வாய்ந்த பயனாளிகள் கொண்ட ’ராணுவம்’ பிரதமர் மோடியுடன் நிற்கிறது. அவர்களுக்கு ஜாதியோ, வயதோ கிடையாது. பாஜகவின் நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகளால் பயனடைந்த இவர்கள்,
மோடி தலைமையிலான ஆட்சி அமைய வாய்ப்பளிப்பதோடு 400 இடங்களுக்கான வெற்றியையும் பெற்றுத்தருவார்கள். மேலும், எங்களது ’பிளான் ஏ’ வெற்றிபெற 60 சதவீதத்துக்கும் குறைவான வாய்ப்பு இருக்கும்போது மட்டுமே ’பிளான் பி’ உருவாக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு அவசியம் இன்றி பிரதமர் மோடி அமோக பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.