பலரும் அறிந்திடாத தளபதி விஜய்யின் டயட் சீக்ரெட்.. பிரபலம் சொன்ன முக்கிய தகவல்
தமிழ் திரை உலகில் மிகப்பெரிய இடத்தை மக்கள் மனதில் பிடித்தவர் தளபதி விஜய், தற்பொழுது 51 வயது ஆகிறது.
ஆனால் அவரை பார்ப்பதற்கு இன்னும் இளமையான ஒரு தோற்றம் கொண்டிருப்பார். அவரைப் பார்த்து பலரும் தாங்களும் உடலை கட்டமைப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று உடற்பயிற்சி ஆரோக்கியமான உணவுகள் எடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் தளபதி விஜய் அவர்களின் துணை நடிகரும் சண்டை பயிற்சியாளருமான ஜாக்குவார் தங்கம் விஜய் படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியவர். ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்து இருக்கின்ற நேரத்தில் அதில் தளபதி விஜய் அவரின் டயட் குறித்து ஒரு சில ரகசியங்களை சொல்லி இருக்கிறார்.
அதாவது தளபதி விஜய் சாப்பாட்டு விஷயத்தில் கரெக்டாக இருப்பார் என்றும், அவுட்டோர் ஷூட்டிங் சென்றாலும் உடற்பயிற்சியை தவறாமல் செய்வார் என்றும் அவர் பேசியிருக்கிறார். ஒருமுறை ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்க ஷூட்டிங் முடிந்து எல்லாரும் தாங்கள் தங்கி இருக்கும் அறைக்கு சென்று விட்டார்கள்.

ஆனால் தளபதி விஜய் அவர்கள் ஓய்வு எடுக்காமல் உடற்பயிற்சி செய்து இருக்கிறார். அது அந்த இடத்தில் பலரின் மனதையும் கவர்ந்து இருக்கிறது. அது மட்டுமில்லாமல் விஜய் மிகவும் சின்சியராக செயல்பட கூடியவர் என்றும் ஜாக்குவார் தங்கம் சொல்லி இருக்கிறார்.
அதோடு, விஜய் உணவு விஷயங்களில் மிகவும் தேர்ந்தெடுத்து சாப்பிடக்கூடியவராக இருக்கிறார். அவ்வாறு தேர்தெடுக்கப்பட்டு அவர் உணவை எடுத்து கொள்வதால் தான் அவர் இன்றும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.