60 வயதானவர்களுடன் கல்லூரி மாணவிகள் டேட்டிங் - வைரலாகும் ’சுகர் பேபி’ கான்செப்ட்!
’சுகர் பேபி’ டேட்டிங் கான்செப்ட் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
சுகர் பேபி
ஐரோப்பிய நாடுகளில் பேபி என்ற பெயரில் டேட்டிங்கின் புதிய டிரெண்ட் ஒன்று வலம் வருகிறது. தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய, கல்லூரி மாணவிகள், பிரபலங்கள் மற்றும் வயதான பணக்காரர்களுடன் டேட்டிங் செய்வதை விரும்புகிறார்களாம். அவ்வாறு களத்தில் இறங்குபவர்களைத் தான் சுகர் பேபி என அழைக்கின்றனர்.

அதன் வரிசையில், லண்டனைச் சேர்ந்தவர் சார்லோட் டேவிஸ்(24). ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு சுகர் பேபியாக மாறத் தூண்டப்பட்டுள்ளார். நீண்டக்கால உறவில் ஒருவருடன் இருப்பதை விரும்பாமல் இணையத்தில் நண்பர்களை தேடியுள்ளார்.
மாணவிகள் டேட்டிங்
அதில், அறிமுகமாகி 30 முதல் 60 வயதுடையவர்களுடன் டேட்டிங் செய்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், இவர்கள் என்னை ஷாப்பிங்கிற்கு அழைத்துச் செல்கிறார்கள். ஆடம்பர பொருட்களைக் கூட வாங்கலாம். விடுமுறைக்கு எங்காவது போக நினைத்தாலும் இவர்கள் ஏற்பாடு செய்கிறார்கள்.

சில வாரங்களுக்கு முன்பு, பல நாட்கள் விடுமுறையை அனுபவித்துவிட்டு மீண்டும் பாரீஸ் வந்தேன். எதுவும் தவறாக நடக்கவில்லை. மேலும் எங்காவது ஏதாவது பிரச்னை இருப்பதாக நான் உணர்ந்தால், உடனடியாக அந்த உறவில் இருந்து வெளியேறுகிறேன்.
எனது முந்தைய உறவுகளை விட ஒவ்வொரு சுகர் டாடியும் எனக்கு அதிக மரியாதை கொடுக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு தேதிக்கும் ஒரு ஆண் துணையிடமிருந்து 250 டாலர்கள் (20 ஆயிரம்) பெறுவது குறிப்பிடத்தக்கது.