விஜய்யுடன் நெருக்கமாக தமன்னா - தீயாய் பரவும் டேட்டிங் வீடியோ!
நடிகை தமன்னா பாலிவுட் நடிகருடன் டேட்டிங் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
தமன்னா
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து, இவர் தனுஷுடன் நடித்த படிக்காதவன் திரைப்படம் ஹிட் ஆனது.
மேலும் இவருக்கு தமிழ் சினிமாவின் டாப் நடிர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது ரஜினி உடன் "ஜெயிலர்" திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
காதல் சர்ச்சை
தொடர்ந்து, இவர் பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவுடன் புத்தாண்டு கொண்டாடியபோது அவர்களின் லிப்லாக் வீடியோ வெளியானது. இருவரும் "லிஸ்ட் ஸ்டோரி 2" என்ற வெப் தொடரில் நடித்து வருகின்றனர். அப்பொழுது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இருவரும் டின்னர் டேட்டிங் முடித்துவிட்டு காரில் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இருவரும் இது குறித்து எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.