எனக்கென்று சொந்த வாழ்க்கை இருக்கிறது புரிந்து கொள்ளுங்கள் - காதல் வதந்தியால் தமன்னா வேதனை

Tamannaah Tamil Cinema
By Thahir Mar 05, 2023 05:23 AM GMT
Report

நடிகை தமன்னா தற்போது பல படங்களில் நடித்து பிஸியான நடிகையாக வளம் வந்து கொண்டு இருக்கிறார். அடிக்கடி, இவரை பற்றி வதந்தி தகவல் சிலவும் பரவி வருகிறது.

காதல் செய்தி உண்மையா?

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அவருக்கு திருமணம் என்றும், அவர் ஒருவரை காதலித்து வருவதாகவும் தீயாய் ஒரு தகவல் பரவியது.

அதனை தொடர்ந்து, தமன்னா நடிகர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியானது.

Has Tamanna fallen in love?

இதன் மூலம், தமன்னா காதலிப்பதை உறுதி செய்யும் வகையில் தகவல்கள் பரவியது. இதனையடுத்து, அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் காதல் குறித்து பேசியுள்ளார்.

சொந்த வாழ்க்கை இருக்கிறது 

இது குறித்து பேசிய தமன்னா ” என்னை பற்றி நிறைய வதந்திகள் பரவி வருகிறது. நான் காதலித்து வருவதாக தகவல் பரப்புகிறார்கள். இதை எல்லாம் படிக்கும் போது எனக்கு சிரிப்பு தான் வருகிறது. ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு என சொந்த வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்’ என கூறியுள்ளார்.

மேலும், நடிகை தமன்னா தற்போது ரஜினிகாந்திற்கு ஜோடியாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைப்போல, தெலுங்கில் போலே சூடியன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.