ஆளே மாறிய நிவேதா தாமஸ்.. ஷாக்கில் ரசிகர்கள் - என்ன ஆச்சு?

Nivetha Thomas Gossip Today Indian Actress
By Sumathi 2 வாரங்கள் முன்

நிவேதா தாமஸ் தற்போதைய நிலை குறித்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

நிவேதா தாமஸ்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நிவேதா தாமஸ். இவர் முன்னனி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் விஜய் உடன் படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு திரையுலகில் தனி முத்திரையை பதித்தவர்.

ஆளே மாறிய நிவேதா தாமஸ்.. ஷாக்கில் ரசிகர்கள் - என்ன ஆச்சு? | What Happened To Nivetha Thomas

தற்போது இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான சாகினி தாகினி படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இவருக்கென தனி ரசிகர்கள் பட்டளம் எப்போதும் உண்டு. இந்நிலையில், தற்போது ஆளே மாறி போயிருக்கிறார்.

என்ன ஆச்சு?

முன்பு இருந்ததை விட 2 மடங்கு உடல் எடை கூடியிருக்கிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எடை அதிகரித்துள்ள அவரை பார்த்து, வாயை பிளக்கின்றனர்.

புதிய படத்திற்காக மாறியுள்ளாரா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இவர் உடல் எடை அதிகரிப்பு இணையத்தில் பேசு பொருளாகவே மாறியுள்ளது.