பணம், புகழ் எல்லாம் பார்த்த எனக்கு நிம்மதி இல்ல... ரஜினிகாந்த் உருக்கம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பணம், புகழ் என அனைத்தையும் பார்த்த எனக்கு நிம்மதி, சந்தோஷம் 10% கூட இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்
சென்னை நுங்கம்பாக்கத்தில் யோகதா சத்சங்க சொஸைட்டி ஆப் இந்தியா சார்பில் கிரியா யோகா மூலம் இனிய வெற்றிகர வாழ்வு என்ற தலைப்பில், ஆன்மீக வாழ்வு நிகழ்வு நடைபெற்று வருகிறது.
ஸ்ரீ ராமா கல்யாண மண்டபத்தில் நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க நூலை வெளியிட்டு பேசினார். நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், நான் எத்தனை படங்களில் நடித்தாலும் என் மனதுக்கு பிடித்த படங்களாக ஸ்ரீராகவேந்திரா, பாபா படங்கள் தான் உள்ளது.
ராகவேந்திரர் படம்
பாபா படத்தை பார்த்து நிறைய பேர் யோகதா சத்சங்கத்தில் இணைந்து இருக்கிறார்கள் என்று சங்கத்தை சேர்ந்தவர்களே சொல்லி இருக்கிறார்கள். ஸ்ரீராகவேந்திரா படம் வந்த பிறகும் தான் எல்லோருக்கும் ராகவேந்திரர் படம் பற்றி தெரிந்தது.
? #தலைவர் @rajinikanth தெளிவான உரை, செம்ம எனர்ஜியா இருக்கார் ?#Jailer #Rajinikanth pic.twitter.com/g5jeBDoWEO
— என்றும் தலைவர் ?? (@ParryNanda83) July 23, 2022
நிறைய பேர் இமயமலைக்கும், பாபா குகைக்கும் செல்கிறார்கள். என் ரசிகர்கள் இருவர் சந்நியாசி ஆகிவிட்டார்கள். நான் இன்னும் நடிகனாக நின்று கொண்டிருக்கிறேன். பணம், புகழ், பெரிய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என அனைத்தையும் பார்த்த எனக்கு வாழ்க்கையில் நிம்மதி, சந்தோஷம் 10% கூட இல்லை.
ரசிகர்களிடையே அதிர்ச்சி
எல்லோருடைய மனமும் பின்னோக்கி அல்லது முன்னோக்கி மட்டுமே இருக்கிறது. ஒன்று பின்னோக்கி நமக்கு நடந்த தீமைகளை பற்றி யோசிக்கிறோம் அல்லது முன்னோக்கி இருக்கும் ஆபத்து பிரச்சனை பற்றி நினைக்கிறோம்.
ஆனால் குழந்தைகளை பாருங்கள். அவர்கள் நிகழ்காலத்தைப் பற்றி யோசிப்பதால் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். உடல், அறிவு,மனம் இந்த மூன்றும் முக்கியம். இதனை இணைப்பது உயிர். 60 வயசுக்கு மேல் நோய் வந்து வாரிசுகளுக்கு பாரமாக இருக்ககூடாது.
நமக்கு நாமே பாரமாக இருக்ககூடாது. சந்தோஷமாக நடந்து போய்க் கொண்டிருக்கும் போதே உயிர் போய்விட வேண்டும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேச்சு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.