90 கி.மீ. வேகத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரயில் - தடம் புரண்டு விபத்து - நடந்தது என்ன?
கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது.
கவரப்பேட்டை
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கவரைப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்தில் 19 பேர் காயமடைந்தனர். கர்நாடக மாநிலம் மைசூருவிலிருந்து காலை 10.30 மணி அளவில் தமிழ்நாடு வழியாக பீகார் மாநிலம் தர்பாங்காவை நோக்கி, பாக்மதி பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது.
இந்த ரயில் ஜோலார்பேட்டை, அரக்கோணம், பெரம்பூர் வழியாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் சென்றுகொண்டிருந்த போது சுமார் 8.30 மணி அளவில், 90 கி.மீ. வேகத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரயில், ஏற்கெனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது .
இதில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது. இதில் 12க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம்புரண்டன. சில ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன.நல்வாய்ப்பாக விபத்தில், உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எக்ஸ்பிரஸ் ரயில்
பின்னர் இந்த சம்பவம்,குறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது . உடனடியாக அரக்கோணத்திலிருந்து சென்ற 90 பேர் அடங்கிய பேரிடர் மீட்புக் குழுவினரும், மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
ரயில் விபத்தால் பயணத்தை மேற்கொள்ள முடியாதவர்கள், அருகில் உள்ள 3 திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், படுக்கை வசதிகளும் செய்து தரப்பட்டன.சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்குத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
ரயில் விபத்து காரணமாகத் தடம்புரண்ட பெட்டிகளை கேஸ் வெல்டிங் மூலம் வெட்டி எடுக்கும் பணிகளும் நடைபெற்றன.மேலும் சிதறிக் கிடக்கும் ரயில் பெட்டிகளையும், தண்டவாளத்தையும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது.