கவரைப்பேட்டை ரயில் விபத்து - சீரமைப்பு பணியின் நிலமை என்ன? முதலமைச்சர் கேள்வி!

M K Stalin DMK Chennai Train Crash
By Vidhya Senthil Oct 12, 2024 02:34 AM GMT
Report

கவரைப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியது. இந்நிலையில், மீட்பு பணிகளில் அரசு துரிதமாக செயல்படுகிறது என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கவரைப்பேட்டை

கவரைப்பேட்டையில் மைசூருவில் இருந்து தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதன் மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது ரயில் பாதை சீரமைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

mk stalin

இந்நிலையில், விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். இதில் காயமடைந்த சுமார் 19 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்தது:

தமிழக அமைச்சரவையில் மாற்றமா? முக்கிய முடிவெடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக அமைச்சரவையில் மாற்றமா? முக்கிய முடிவெடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

“திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். தகவல் கிடைக்கப்பெற்றவுடன், அமைச்சர் நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல உத்தரவிட்டேன்.மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் அரசு துரிதமாகச் செயல்பட்டு வருகிறது.

 ரயில் விபத்து

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.மற்ற பயணிகளுக்குத் தேவையான உணவு, அவர்கள் ஊர் திரும்புவதற்கான பயண வசதிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கெனத் தனியே ஒரு குழு இயங்கிக் கொண்டிருக்கிறது.

kavarapettai train accident

விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்” என்றார். கவரைப்பேட்டையில் விபத்து நடைபெற்ற இடத்தில் அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில்  சென்று ஆறுதல் கூறினார்.