தீவிரமடையும் தேர்தல் - இந்தியா கூட்டணிக்காக வடமாநிலம் புறப்படும் மு.க.ஸ்டாலின்!!

M K Stalin DMK Lok Sabha Election 2024
By Karthick Apr 24, 2024 08:38 AM GMT
Report

நாட்டில் மக்களவை தேர்தல் தீவிரமடைந்துள்ளது.

மக்களவை தேர்தல்

நாட்டின் 18-வது அரசை முடிவு செய்யும் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகின்றது. முதல் கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 102 இடங்களுக்கு நடந்து முடிந்துள்ள தேர்தலின் 2-ஆம் கட்டம் வரும் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.

mk-stalin-to-campaign-in-north-india-

10 ஆண்டுகால பாஜக ஆட்சியை முடிக்கவேண்டும் என பல எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து மாபெரும் இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது.

பிரதமரின் முகத்தில் தோல்வி பயம் - முதலமைச்சர் முக ஸ்டாலின் கடும் தாக்கு

பிரதமரின் முகத்தில் தோல்வி பயம் - முதலமைச்சர் முக ஸ்டாலின் கடும் தாக்கு

காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மீ, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, இடதுசாரிகள் என பல எதிர்க்கட்சிகள் இந்த கூட்டணியில் இணைந்துள்ளன.

பிரச்சாரம்

பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டின் முக்கிய தலைவர்கள் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

mk-stalin-to-campaign-in-north-india-

தமிழ்கத்தில் தேர்தல் முடிந்துள்ள நிலையில், இந்தியா கூட்டணிக்காக வடமாநிலங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள முதல்வர் முக ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

mk-stalin-to-campaign-in-north-india-

கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அவர் பிரசாரம் செய்வார் என தெரிகிறது.