பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் - இந்திய அணி விலகினால் இதுதான் நடக்கும்!

Cricket Sri Lanka Pakistan India Sports
By Jiyath Jul 13, 2024 01:50 PM GMT
Report

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி

ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் லீக் சுற்று முடிவில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் விளையாடவுள்ளனர்.

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் - இந்திய அணி விலகினால் இதுதான் நடக்கும்! | What Happen India Pulls Out Of Champions Trophy

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், துபாய் அல்லது இலங்கையில் போட்டிகளை நடத்துமாறு ஐ.சி.சி.யிடம், பி.சி.சி.ஐ வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

கவுதம் கம்பீர் மீட்டிங்கில் கூட பேச மாட்டாரு.. அத மட்டும் தான் யோசிப்பாரு - பிரபல வீரர் பளீச்!

கவுதம் கம்பீர் மீட்டிங்கில் கூட பேச மாட்டாரு.. அத மட்டும் தான் யோசிப்பாரு - பிரபல வீரர் பளீச்!

இலங்கை அணி

இந்நிலையில், பாகிஸ்தானில் தான் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடத்தப்படும் என முடிவு எடுக்கப்பட்டால் இந்திய அணி தொடரில் இருந்து விலக வாய்ப்பு உள்ளது. ஒருவேளை சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து இந்திய அணி விலகினால்,

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் - இந்திய அணி விலகினால் இதுதான் நடக்கும்! | What Happen India Pulls Out Of Champions Trophy

கடந்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் புள்ளிப்பட்டியலில் 9-வது இடம் பிடித்த இலங்கை அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.