இந்த மாதியான காகம் தினமும் வீட்டிற்கு வருகிறதா? இதுதான் அர்த்தம்- அவசியம் தெரிஞ்கோங்க!
வீட்டிற்குத் தினமும் இந்த மதியான காகம் வந்தால் என்ன அர்த்தம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
காகம்
நாம் அன்றாட பார்க்கக் கூடிய காகங்கள் மூன்று வகைகள் உள்ளன. முதலில் உடல் முழுவதும் கருமை நிறம் கொண்ட காக்கை வகை. அதாவது இதனை நாம் அண்டங்காக்கை என்று கூறுகிறோம்.
இரண்டாவது தன் பின் கழுத்தில் சாம்பல் நிறம் கொண்ட மணி காக்கை. மூன்றாவது வகை அரிதான வெள்ளை காக்கை.அனைவராலும் இதை எளிதில் பார்க்க முடியாது. அந்த வகையில் வீட்டிற்குத் தினமும் காகம் வருவது நல்லதா என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோதிடத்தில் சனி பகவானின் வாகனமாக காகம் உள்ளது.மேலும், முன்னோர்கள் வடிவமாகக் காக்கைகள் என்று அனைவரும் ஆழமாக நம்பக்கூடிய ஒன்றாகும்.ஒரு கருப்பு காகம் (அண்டங்காக்கை) நமது வீடுகளில் அமர்ந்து கரைகிறது என்று சொன்னால் அது மிகத் தீய சகுனம் ஆகும்.
அர்த்தம்
அதே போல் வெள்ளை காகங்கள் காகங்களைப் பார்ப்பது அது தீய சகுனத்தைக் குறிப்பதே ஆகும். அதனைத் தொடர்ந்து கழுத்தில் சாம்பல் நிறம் கொண்ட காக்கைகள்(மணி காக்கை) வீட்டில் அமர்ந்து கரைவது நல்ல சகுனத்திற்கு உகந்ததாகும்.
மணி காகம் தினந்தோறும் வீட்டிற்கு வந்து செல்வது நன்மை பெருகி வீடு வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கான அறிகுறி. தினந்தோறும் காகம் வீட்டிற்கு வந்தால் வீட்டில் ஏதோ நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்று ஜோதிட கணிப்பு சாஸ்திரங்கள் கூறுகின்றன