உங்க வீட்டில் சுவர் கடிகாரத்தை இந்த திசையில் மாட்டி இருக்கீங்களா? உடனே சரிபார்த்து கொள்ளுங்கள்!
வீட்டில் சுவர் கடிகாரத்தை எந்த திசையில் வைப்பதன் மூலம், நன்மைகள் பெற முடியும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சுவர் கடிகாரம்
பொதுவாக நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருள்களுக்கும் சாஸ்திரத்தில் பலன் உண்டு. ஒரு குறிப்பிட்ட பொருளை வீட்டில் சரியான இடத்தில் வைக்காவிட்டால் தீமைகளைச் சந்திக்க நேரிடும். அப்படி நாம் அன்றாடம் பயன்படுத்தும் தவறான திசையில் கடிகாரத்தை வைப்பது வாஸ்து குறைபாட்டிற்குக் காரணமாக அமைந்து விடுகிறது.
இதனால் எதிர்மறையான சக்திகள் வீட்டில் வந்துவிடுகிறது. வீட்டில் சுவர்க் கடிகாரத்தை எந்த திசையில் வைத்தால் நல்லது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். வீட்டில் உள்ள சுவர்க் கடிகாரங்கள் மிக முக்கியமான விஷயம். வாஸ்து சாஸ்திரத்தின்படி,தெற்கு அல்லது மேற்கு திசையில் வைக்கக் கூடாது .
எந்த திசை சிறந்தது?
வீட்டில் சுவர்க் கடிகாரத்தை மாட்டுவதற்குக் கிழக்கு மற்றும் வடக்கு திசைகள் சிறந்தது.இதன் மூலம் நேர்மறை ஆற்றல் பெற முடியும் எனச் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது படுக்கையறையில் சுவர்க் கடிகாரத்தை மாட்டினாலும் கூட வடக்கு மற்றும் கிழக்கு திசையில் மட்டுமே நிறுவ வேண்டும்.
மேலும் கடிகாரத்தைக் கிழக்கு திசையிலிருந்து மாட்டுவதால் சண்டை, சச்சரவு அல்லது பணப் பற்றாக்குறை போன்றவை இருக்காது. வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கச் செய்து நன்மைகள் வந்து சேரும் . மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடத்தின் பொதுவான கருத்து மட்டுமே. IBCதமிழ்நாடு அதை உறுதிப்படுத்தவில்லை.