நோம்பு இருக்கும்போது உடம்பில் இதுவெல்லாம் நடக்குமா? பின்விளைவுகளை தடுக்க இதை செய்யுங்கள்!
ரமலான் மாதத்தில் நோம்பு இருக்கும்போது நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை குறித்து காணலாம்.
நோம்பு
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையாக கருதப்படும் ரமலான் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. முஸ்லீம் மக்கள் அனைவரும் 30 நாட்கள் வரை நோன்பு மேற்கொள்வார்கள்.
நோன்பு காலம் தொடங்கிய ஒரு சில நாட்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். ஏனெனில், வருடம் முழுவதும் நன்கு சாப்பிட்டு பழகிய நம் உடலுக்கு திடீரென உணவு இல்லை என்றால் அது கடினம் தான்.
8 முதல் 9 மணி நேரம் வரை உடலுக்கு உணவு இல்லை என்றல் அது கல்லீரல் மற்றும் தசைகளில் இருந்து சத்துக்களை எடுத்துக்கொள்ளும். உடலுக்கு தேவையான குளுக்கோஸை முடிந்தவரை போராடி எடுத்தபின் சேகரிக்கப்பட்டுள்ள கொழுப்பை பயன்படுத்திக்கொள்ளும்.
இதுலாம் நடக்குமா?
உடலில் கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறையும் போது உடல் எடை குறையும். பின், கொலஸ்ட்ரால் அளவு குறைந்து உடல் தன்னை தானே சுத்திகரித்துக்கொள்வதன் மூலம் நீரிழிவு நோய் வருவதை தடுக்க உதவுகிறது.
குளுக்கோஸின் அளவு குறையும் போது எனர்ஜி இல்லாமல் உடல் மிகவும் அவதிப்படும் அப்போது உணவுக்கான தேடல் அதிகரித்து சில நேரங்களில் தலைவலி, உடல் வலி ஏற்படக்கூடும்.
தொடர்ந்து நோம்பு இருக்கும்போது, பசி சோர்வுக்கெல்லாம் உடல் பழகிக்கொண்டு தேவைப்படும் எனர்ஜியை மட்டும் பயன்படுத்தும். இதன் மூலம் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி உடலை சுத்தம் செய்வதோடு, சர்மத்தில் பழைய செல்கள் அழிந்து புது செல்கள் உருவாகும்.
சுமார் ஒரு மாத காலம் நோன்பு இருப்பது நல்லது என்றாலும் அதனை தொடர்ந்து கடைப்பிடித்து வருவது நல்லது அல்ல. ஏனென்றால், ஒரு கட்டத்துக்கு மேல் உடல் மிகவும் சிரமப்பட்டு மிகவும் வீக்காகிவிடும்.
இதனால்,பல பின் விளைவுகள் ஏற்படும் எனவே, ரமலான் நோம்பு இருப்பது மிகவும் நல்லது என்றாலும் அது குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.