நீர் குடித்த 10 நிமிடங்களிலேயே சிறுநீர் கழிக்கிறீர்களா? எச்சரிக்கும் மருத்துவர்கள்
பொதுவாகவே ஆரோக்கியதாக வாழ்க்கை முறைக்கு ஒருவர் தினசரி 2 தொடக்கம் 3 லீட்டர் தண்ணீரை குடிக்க வேண்டியது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஆனால் சிலருக்கு தண்ணீரை குடித்த 10 முதல் 15 நிமிடங்களிலேயே சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுகின்றது.
அதனால் இவ்வாறான பிரச்சினை இருப்பவர்கள் தண்ணீர் குடிப்பதையே முடிந்தவரை தவிர்த்து விடுகின்றார்கள்.

ஆனால் இது ஒரு தீவிரமான உடல்நல பிரச்சினை என்பது உங்களுக்கு தெரியுமா? எதனால் தண்ணீர் குடித்த உடனேயே சிறுநீர் கழிக்க வேண்டி ஏற்படுகின்றது அதற்கு என்ன தீர்வு என்பது குறித்து விரிவான மருத்துவ விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன காரணம்?
தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதத என்பது அனைவரும் அறிந்தது தான். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தால், நம் உடல் தானாகவே அதிகப்படியான நீரை வெளியேற்றும்.அதனால் அடிக்கடி சிறுநீர் கழிப்பது இயல்புதான்.

குறிப்பான நாம் மிக விரைவாகவோ அல்லது அடிக்கடியோ அதிக தண்ணீரை பருகும் பட்சத்தில், உடனடியாக அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற உடல் அதிக சிறுநீரை உற்பத்தி செய்கிறது. இதனால் சிறுநீர்ப்பை விரைவாக நிரம்பி, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவையை ஏற்படுத்துகின்றது.
ஆனால், சிலர் தண்ணீர் குறைவாகக் குடித்தாலும், அடிக்கடி சிறுநீர் கழிக்க ஓடுவார்கள். அப்படிப்படவர்கள் இந்த விடயத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

உணர்திறன் வாய்ந்த சிறுநீர்ப்பை : இயல்பாகவே சிலருக்கு உணர்திறன் வாய்ந்த சிறுநீர்ப்பை இருக்கும். இதன் காரணமாக, தண்ணீர் குடித்த உடனேயே ,சிறுநீர்ப்பை அதை உடனடியாக வெளியேற்ற சமிக்ஞைகளை மூளைக்கு அனுப்ப ஆடரம்பித்துவிடுகின்றது. இவ்வாறானவர்கள் உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
இவை தவிர, நம்மில் பலருக்குக் காலையில் எழுந்ததும் காபி, சாயங்காலம் டீ, நடுவில் கூல் டிரிங்க்ஸ் குடிக்க்கும் பழக்கம் இருக்கும். இந்த பானங்களில் இருக்கும் 'காஃபின்' (Caffeine) ஒரு 'டையூரிடிக்' (Diuretic) ஆகச் செயல்படும் தன்மை கொண்டது.
அதாவது, இது சிறுநீரகத்தைத் தூண்டிவிட்டு, இயல்பை விட அதிகமான தண்ணீரை வெளியேற்றச் செய்வதில் இந்த டையூரிடிக் ஆற்றல் காட்டுகின்றது. நீங்கள் அளவுக்கு அதிகமாகக் காபி, டீ குடிக்கும் பழ்ககம் கொண்டவர் என்றால், இதைச் சற்றுக் குறைத்தாலே இந்த அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும்.

மேலும், ஹார்மோன் சமநிலையின்மை, நீரிழிவு மற்றும் அதிக தாகம் போன்றவையும் இந்த பிர்சினைக்கு வழிவகுக்கும். சிறுநீர் கழிப்பதை அதிகரிக்கும் சில மருந்துகளைப் பயன்படுத்துவதாலும் இது ஏற்படலாம். மறுபுறம், மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற உளவியல் பிரச்சனைகள் இருப்பவர்களுக்கும் இந்த பிரச்சியை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.
மன அழுத்தம் காமரணமாக உடலில் அட்ரினலின் மற்றும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்களின் செயல்பாடு அதிகரிக்கும்.
அதனால், சறுநீர்ப்பையின் உணர்திறன் அதிகரிக்கின்றது. இது சிறுநீரகங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தி, அவற்றை விரைவாக வடிகட்டி வெளியேற்ற தூண்டுகின்றது.
எனவே மன அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் போது இந்த பிரச்சினை தானாவே சரியாகிவிடும்.இந்த பிரச்சினை நீடிக்கும் பட்சத்தில் அது வேறு சில ஆபத்தான உடல் ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இது குறித்து மிகுந்த விழிப்புணர்வு அவசியம்.