தேர்தல் விதிகள் என்றால் என்ன ..? என்னென்ன மாற்றங்கள் அமலுக்கு வரும்..? முழு தகவல்
Government Of India
Election
By Karthick
இன்று மதியம் 3 மணி அளவில் தேர்தல் தேதியை அறிவிக்கவுள்ளது தேர்தல் ஆணையம்.
தேர்தல் விதிகள்
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மக்களவை தேர்தல் தேதி இன்று மதியம் அறிவிக்கப்படவுள்ளது. நாட்டின் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை துவங்கிவிட்ட நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் விதிகளும் அமலுக்கு வந்துவிடும்.
அப்படி அமலுக்கு வரும் தேர்தல் விதிகள் என்னென்ன என்பதை தற்போது காணலாம்.
- அரசு ஊழியர்களைத் தவிர, பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில அமைச்சகர்கள் யாரும் எந்த ஒரு புதிய திட்டதையும் துவங்க கூடாது. அதே நேரத்தில் அரசு அதிகாரிகள் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கலாம்.
- பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், பிற அதிகாரிகள் என யாரும் நிதி மானியமோ அல்லது புதிய திட்டங்களையோ அறிவித்தல், அல்லது வாக்குறுதி வழங்குதல் கூடாது. ஆனால் பழைய நிதியுதவி திட்டங்கள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.
- தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு, புதிய சாலை அமைத்தல், குடிநீர் வசதிகள் வழங்குதல் போன்றவை தொடர்பாக எந்த வாக்குறுதியும் வழங்க முடியாது.
- தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த பிறகு, அரசின் இயந்திரங்கள் மற்றும் பணியாளர்களை பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் யாரும் தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்துவது தடைசெய்யப்படும்.
- ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்ககூடாது என்பதற்காக அரசு அல்லது பொது நிறுவனங்களில் தற்காலிக நியமனங்கள் தடை செய்யப்படும்.
- அரசின் ஓய்வு இல்லங்கள், பங்களாக்கள் மற்றும் விடுதிகள் போன்றவற்றை ஆளுங்கட்சியின் வேட்பாளர்கள் உபயோகிக்க கூடாது.
- அரசுப் போக்குவரத்துக்கள் அதாவது அதிகாரபூர்வ விமானங்கள், வாகனங்கள் மற்றும் அரசின் இயந்திரங்கள் பணியாளர்கள் உள்ளிட்டவை தேர்தல் பணிகளுக்காக ஆளும் கட்சியின் நலன்களுக்கு பயன்படுத்த முடியாது.
- அரசு செலவில் தேர்தல் சமயத்தில் செய்தித்தாள்கள் மற்றும் பிற ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட தடை விதிக்கப்படும்.