மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை - தேனீக்கள் கொட்டுவதில் இவ்வளவு நன்மைகளா?
தேனீக்கள் கொட்டுவதிலல் மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை எப்படி குனமாகும் என்று பார்க்கலாம்.
தேனீக்கள்
தேனீக்கள் கடிப்பது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று கேள்விப்பட்டிருப்போம். அதே நேரம், தேனீக்களைக் கொட்ட வைப்பதன் மூலம், சில உடல் நலப் பிரச்னைகளைக் குணமாக்க முடியும் என்றால், நம்ப முடியுமா? பாரம்பரிய சீன வைத்தியத்தில் இந்தச் சிகிச்சை பிரபலம்.
பழங்காலத்தில் ஐரோப்பாவில் இந்தச் சிகிச்சை முறை இருந்திருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். நம் நாட்டிலும் மும்பை, கேரளாவின் இடுக்கி உள்ளிட்ட இடங்களிலும், தமிழகத்தில் நமது மதுரையிலும் இந்தச் சிகிச்சை முறை தற்போது பின்பற்றப்படுகிறது. இந்தச் சிகிச்சை முறையை 'அபிதெரபி' என்கிறார்கள்.
தேனீயின் நச்சு பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். மல்ட்டிபிள் ஸெலரோசிஸ் (Multiple sclerosis) என்ற சுய நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டைக் குணப்படுத்த இந்த முறை பயன்படுத்தப்படுகிறது.
இதனால், உளவியல் குறைபாடுகள், தசைச்சிதைவு, பார்வைத்திறன் பாதிப்பு உள்பட நிறைய பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்த நோயை குணப்படுத்த மருத்துவமுறை இதுவரையில் கண்டறியப்படவில்லை. ஆனால், இதனை தேனீ நச்சு மூலம் குணப்படுத்தலாம் என்கிறது சீன வைத்தியம்.
முழு விவரம்..
மேலும், மூட்டுவலி, எலும்புகளில் ஏற்படும் வலி, ஆர்த்ரைடிஸ் எனப்படும் மூட்டு அழற்சி மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் குறைபாடு போன்றவற்றையும் தேனீ நச்சைக்கொண்டு குணமாக்க முடியும் என்கிறார்கள்.
புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கும் இந்தத் தேனீக்கடி வைத்தியம் செய்யப்படுகிறது என்றாலும், இவற்றுக்கு நல்ல பலன் கிடைத்தற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தேனீக்கொட்டு வைத்தியம் என்பது வலி அல்லது நோய் உள்ள இடத்தில் தேனீயைக் கொட்ட விடுவது.
பொதுவாக, ஒரு தேனீ கொட்டும்போது அதன் கொடுக்கின் மேல் உறையைக் கொட்டிய இடத்திலேயே விட்டுவிடும். அந்த கொடுக்கில் நச்சுப்பை அமைந்திருப்பதால், உடலில் நச்சு பரவ ஆரம்பிக்கிறது. இதனால், அதிக வலி ஏற்பட்டாலும், நோய் குறைவதில் முன்னேற்றம் ஏற்படுவதால்,
வலியைப் பொறுத்துக்கொண்டு இந்தச் சிகிச்சையைப் பெற முன்வருகின்றனர். தேனீக்கொட்டினால் அலர்ஜி ஏற்படுகிறதா என்று சோதித்து, பாதிப்புஇல்லை என்று உறுதி செய்ப்பட்டவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதேபோல மல்ட்டிபிள் ஸெலரோசிஸ் போன்ற சில நோய்களுக்கு, ஆறு மாத காலங்கள் வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேனீ நச்சில், மெலிட்டின் (Melittin) என்ற புரதம் அதிக அளவில் உள்ளது. இது, நமது உடலில் தற்காலிக வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்தும்.
நன்மைகளா?
தேனீ நச்சில் உள்ள மெலிட்டின் மற்றும் பாஸ்போலிப்பேஸ் புரதங்கள் நுண்ணுயிர்க்கொல்லியாகச் செயல்படும் தன்மை கொண்டுள்ளன. இந்த நிலையில், தேனீக்கொட்டு உடன் அலோபதி மருத்துவமுறையையும் இணைத்துச் செயல்படுத்தும்போது ஆர்த்ரைடிஸ் நோயைக் குணப்படுத்தலாம் என (NCBI) உறுதி செய்துள்ளது.
தேனீ நச்சில் உள்ள 'அபிமின்' என்ற புரதம் நரம்பு செல்களில் செயல்படக்கூடியது. அபிமின் புரதம், மூளையின் நினைவாற்றல் திறனுக்குக் காரணமான எஸ்.கே சேனல்கள் எனப்படும் நரம்பு மண்டல செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது என்பது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நச்சுத்தன்மை காரணமாக மனிதர்களுக்கு இதுவரையில் பரிந்துரைக்கப்படவில்லை.தேனீயின் நச்சு ஆர்த்ரைடிஸ் நோயால் ஏற்படும் மூட்டுவீக்கத்தைக் குறைக்கிறது என ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆனால், ‘இந்தத் தேனீக்கொட்டு சிகிச்சைக்குச் சாதகமாக எந்த ஆய்வு முடிவும் இதுவரையில் இல்லை’ என அமெரிக்கப் புற்றுநோய்ச் சங்கம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் வேலைக்காரத் தேனீக்களே பெரும்பாலும் கொட்டுகின்றன. இவை, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கொட்டும் திறன் உடையது.
தேனீக்கள் கொட்டுவதால் நமக்கு அது வலி மட்டுமே. தேனீக்களோ இதனால் தங்கள் வாழ்வையே இழக்கின்றன. ஒருமுறை கொட்டியவுடன் தேனீக்கள் இறந்துவிடுமாம். ஆக, உயிரைக் கொடுத்து நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள் போன்றவை இந்தத் தேனீக்கள்.