அடேங்கப்பா... தினமும் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?

life-style-health
By Nandhini Jul 17, 2021 10:03 AM GMT
Report

இஞ்சி நாட்டு மருத்துவத்திலும் பெரிதும் பயன்படுகிறது. பழங்காலம் முதலாக இஞ்சி ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பலவாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சொல்லப்போனால் இஞ்சியில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக மருத்துவ பண்புகள் அடங்கியுள்ளதால், இது பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்க தீர்வளிக்கிறது.

உயிர்வாழ்வதற்கு உணவை தேடிய பிறகு அதனையே மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தியவர்கள் நமது முன்னோர்கள்.

அந்த வகையில் இஞ்சியும் மருந்தாகும் உணவாக விளங்குகிறது. இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல் எனப்படும். உடலில் ஏற்படும் கெட்ட நீரை இழுத்து வெளியேற்றும் குணம் கொண்டதால் இஞ்சி என்று அழைக்கப்படுகிறது.

பொங்கல் விழாவின் போது வைக்கப்படும் வெண்பொங்கல் பொங்கும் பானையில் இஞ்சி கொத்தை கட்டி அதன் பிறகே பொங்கல் வைப்பார்கள்.

அடேங்கப்பா... தினமும் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா? | Life Style Health

வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்

செரிமானம்

தேனில் ஊற வைத்த இஞ்சியை ஒரு துண்டு தினமும் சாப்பிட்டால், செரிமானம் சிறப்பாக நடைபெறும். வயிற்று உப்புச பிரச்சனை நீங்கிவிடும்.

புற்றுநோய்

தினமும் தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிட்டு வந்தால், இஞ்சியானது உடலைத் தாக்கிய புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோய் உடல் முழுவதும் பரவுவதைத் தடுக்கும்.

வாந்தி

தினமும் தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிட்டு வந்தால், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் செயல்பட்டு, வாந்தி அல்லது குமட்டல் வருவது போன்ற உணர்வைக் குறைக்கும்.

ஆஸ்துமா

தினமும் தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு இஞ்சி நல்லது. பழங்காலத்தில் ஆஸ்துமா பிரச்சனைக்கு தீர்வளிக்க இஞ்சி பயன்படுத்தப்பட்டு வந்தது. அதிலும் இஞ்சி சாறு குடிக்கப் பிடிக்காதவர்கள், இஞ்சியை தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வரலாம்.

சர்க்கரை நோய்க்கு

தினமும் தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். இதனால் சர்க்கரை நோய் வருவதற்கான அபாயமும் குறையும்.

ஒற்றைத் தலைவலி

தினமும் தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் வலி நீங்கும். இஞ்சி ஒற்றைத் தலைவலியில் இருந்து இயற்கையாக சரிசெய்யும்.

உடல் வலிக்கு

தினமும் தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் பல வலிகளான உடல் வலி, மூட்டு வலி, கால் வலி, மாதவிடாய் கால வயிற்று வலி மற்றும் இதர வலிகளையும் போக்கும்.

உடல் எடையை குறைக்க

காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிட்டு வந்தால், உங்கள் எடை விரைவில் குறைவதைக் காணலாம்.