27 வருஷத்திற்குப் பின்.. வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியாவில் வரலாற்று சாதனை - கண்ணீர் விட்ட பிரையன் லாரா!

Viral Video West Indies cricket team Australia Cricket Team
By Sumathi Jan 28, 2024 11:32 AM GMT
Report

ஆஸ்திரேலியாவில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

west-indies-beat-australia

இதில் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்களை எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.

என் மகனுக்கு அந்த இந்திய வீரரைத் தான் முன்மாதிரியாக கூறுவேன் - பிரையன் லாரா புகழாரம்!

என் மகனுக்கு அந்த இந்திய வீரரைத் தான் முன்மாதிரியாக கூறுவேன் - பிரையன் லாரா புகழாரம்!

வைரல் வீடியோ

அதன்பின், 22 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 72.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 215 ரன்களை இலக்காக கொண்டு ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. ஸ்டீவ் ஸ்மித் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் எடுத்தார்.

ஆனால், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். , கடைசியாக ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்து 8 ரன்களில் தோல்வியை தழுவியது. இதன்மூலம், மேற்கு இந்திய தீவுகள் அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், வர்ணனை செய்து கொண்டிருந்த பிரையன் லாரா அருகில் இருந்த ஆடம் கில் கிறிஸ்டை பிடித்துக் கொண்டு கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தவாறு பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.