உலக கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக முதல் 'சதம்' அடித்த வீரர்; 175 ரன்கள் விளாசல் - யார் தெரியுமா?

Kapil Dev Cricket India Indian Cricket Team
By Jiyath Aug 09, 2023 10:32 AM GMT
Report

உலக கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக முதல் சதம் விளாசிய வீரர் குறித்த தகவல்.

சதம்

கிரிக்கெட் போட்டிகளில் ஒரு வீரர் ஒரு இன்னிங்சில் 100 ரன்களை எடுக்கும்போது அது சாதமாக கணக்கிடப்படும். 50 ரன்கள் எடுத்திருந்தால் அது அரை சதம் என்று சொல்லப்படும். ஒரு வீரர் 200 ரன்களை எடுத்திருந்தால் அது இரட்டை சதம் என்று சொல்லப்படும்.

உலக கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக முதல்

ஒரு நாள் போட்டிகள் வருவதற்கு முன் நடந்த டெஸ்ட் போட்டிகளில் ஒரு வீரர் சதம் அடிப்பது என்பது எட்டாத கனியாகவே இருந்துள்ளது. தற்போதுவரை டெஸ்ட் போட்டிகளில் ஒரே இன்னிங்சில் 400 ரன்களை குவித்த வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் 'பிரைன் லாரா' இருக்கிறார். அவருக்கு அடுத்து 300 ரன்களுக்கு மேல் அடித்து இந்திய அணி வீரர் சேவாக் உள்ளிட்ட சில வீரர்கள் இருக்கின்றனர்.

இந்திய அணிக்கான முதல் சதம்

கடந்த 1974ம் ஆண்டு தான் இந்தியா தங்களது முதல் ஒருநாள் தொடரில் அறிமுகமானது. ஆனால் 9 ஆண்டுகளுக்கு பிறகுதான் சதம் கிடைத்தது. 1983ம் ஆண்டு இந்தியா,ஜிம்பாவே அணியை உலகக்கோப்பை தொடரின் 20வது போட்டியில் எதிர்கொண்டு விளையாடியது.

உலக கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக முதல்

இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 266 ரன்களை குவித்தது. இதில் இந்திய அணிக்காக அதிரடியாக விளையாடிய கேப்டன் 'கபில் தேவ்' 16 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 175 ரன்களை இந்திய அணிக்காக விளாசினார். இதுவே இந்திய அணிக்கான முதல் சதமாகும். இந்த போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.