மேற்கு வங்கம் சரக்கு ரயில் விரைவு ரயில் மீது மோதி கோர விபத்து - பயணிகள் நிலை என்ன?

West Bengal Train Crash Accident Mamata Banerjee
By Karthikraja Jun 17, 2024 05:51 AM GMT
Report

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் சரக்கு ரயில், கஞ்சன்ஜங்கா ரயில் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள

மேற்கு வங்கம்

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் சரக்கு ரயில், சியால்டா செல்லும் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் பனிஷ்தேவா பகுதியில் நின்று கொண்டிருந்த போது சரக்கு ரயில் மோதிஉள்ளது. 

west bangal Kanchenjunga Express train accident latest image

தகவல் அறிந்த பேரிடர் மீட்புக்குழுவினர், ரயில் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளனர். ரயில் விபத்தில் பல பெட்டிகள் தடம்புரண்டன. சரக்கு ரயில் மோதியதில், பயணிகள் ரயிலின் கடைசி 3 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது வரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்திருக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. 

மதுரை ரயில் விபத்து சதி வேலை காரணமா? டி.ஜி.பி பரபரப்பு விளக்கம்

மதுரை ரயில் விபத்து சதி வேலை காரணமா? டி.ஜி.பி பரபரப்பு விளக்கம்

மம்தா பானர்ஜி

மீட்பு பணிக்காக விபத்து நடந்த இடத்திற்கு 20 க்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.. போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெறும் என மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், டார்ஜிலிங் மாவட்டத்தில் நடந்த பயங்கர ரயில் விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலில் மோதியதாக கூறப்படுகிறது. மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது எனவும் கூறினார்.  


ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 

“NFR மண்டலத்தில் எதிர்பாராத விபத்து. போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில்வே, NDRF மற்றும் SDRF ஆகியவை ஒருங்கிணைப்பில் செயல்படுகின்றன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.