150 ஆண்டு பயணம்; ட்ராம் சேவையை நிறுத்த அரசு முடிவு - என்ன காரணம்?
ட்ராம் வண்டிகளின் சேவையை நிறுத்த போவதாக மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.
ட்ராம் சேவை
மும்பை, டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களிலும், நாசிக், பாட்னா உள்ளிட்ட சிறிய நகரங்களிலும் ட்ராம்கள் பயன்பாட்டில் இருந்தது. மொத்தமாக 150 பேர் வரை ஒரு டிராம் வண்டியில் பயணிக்க முடியும்.
தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் காரணமாக ட்ராம் சேவைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு உணவகங்களாகவும் நூலகங்களாகவும் மாற்றப்பட்டன. தற்போது அந்த சேவையை முற்றிலுமாக நிறுத்த மேற்கு வங்க அரசு முடிவெடுத்துள்ளது.
அரசு முடிவு
மேலும், சுற்றுலா நோக்கத்துக்காக ரேஸ்கோர்ஸ் மற்றும் எஸ்பிளனேட் இடையே மட்டும் இயக்க திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், இதற்கு பொதுமக்கள் மற்றும் ட்ராம் பயனர்கள் சங்கம் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.
எனவே, ட்ராம் எப்போது நிறுத்தப்படும் என்ற தேதியை இதுவரை முடிவு செய்யவில்லை.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, போர்ச்சுகலின் லிஸ்பான், ஆஸ்திரியாவின் வியன்னா, கனடாவின் டொரோன்டோ உள்ளிட்ட இடங்களில் மட்டும் ட்ராம் வண்டிகள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.