இந்தியாவிற்குள் நுழைந்த உருமாறிய கொரோனா - பதற்றத்தில் மாநிலங்கள்!
4 பேருக்கு பி.எப்-7 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பி.எப்-7
சீனாவில் பி.எப். 7 என்ற உருமாறிய கொரோனா வைரசால் பல லட்சம் பேர் பாதிக்கப்படுவதாகவும், ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருவதாகவும், ஆய்வுத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், மேற்குவங்கத்தில் 4 பேருக்கு பி.எப்-7 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.
40 நாளில் அதிகமாகும்
இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிசிச்சை பெற்றுவருகின்றனர். உருமாறிய கொரானா தாக்கம் அடுத்த 30 முதல் 40 நாள்களுக்குள் அதிகரிக்கும் என்று மத்திய சுகாதாரரத்துறை அதிகாரிகள் அறிவித்து இருந்தனர். இதற்காக அச்சப்படத்தேவை இல்லை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான
மத்திய சுகாதாரத்துறை மற்றும் தேசிய தடுப்பூசி நிபுணர்கள் குழு இணைந்து BF 7 திரிபு கொரோனா பாதிப்பிற்கு எதிராக கொரோனா தடுப்பூசிகளின் செயல்பாடுகளை மேப்பிங் முறையில் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தை பொருத்தவரையில் சீனா வில் இருந்து தமிழகம் வந்த யாருக்கு தெற்று இல்லை என்றும் மக்கள் தனிமனித இடைவெளி பொதுஇடங்களில் முகக்கவசம் போன்றவற்றை கடைபிடிக்குமாறும் சுகதரத்துறை அமைசச்சர் ம.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் .