சீனாவில் இருந்து தமிழகம் வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று
சீனாவில் இருந்து தமிழகம் வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை
சீனாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.அதில் அடுத்த 40 நாட்கள் தான் மிக முக்கியமானவை என்று தெரிவித்துள்ளது.
ஜனவரி மத்தியில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவை கூறுகின்றன. இதற்கு முன் ஏற்பட்ட தொற்றின் அடிப்படையில் கிடைத்த அனுபவத்தின் படி இவ்வாறு கணிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் இருந்து வந்தவருக்கு கொரோனா தொற்று
இந்த நிலையில் நேற்று முன்தினம் சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த அம்மா மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதை தொடர்ந்து சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை விமான நிலையம் வந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மவாட்டம் இளம்பிள்ளை கிராமத்தைச் சேர்ந்த அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.