விநோதமான உணவு பழக்கம் கொண்ட நாடுகள் தெரியுமா? இந்த தவறலாம் செஞ்சிராதீங்க!
உலக நாடுகளின் வினோதமான உணவு உண்ணும் பழக்கங்களை குறித்து இந்த பதிவில் காணலாம்.
உணவு பழக்கம்
உணவு என்பது எல்லாம் உயிரினங்களுக்கும் மிக முக்கியமானது தான். ஆனால், அதனை எப்படி சரியாக சாப்பிடுகிறோம் என்பது தான் மற்ற உயிரினங்களில் இருந்து மனித இனத்தை வேறுபடுத்துகிறது.
அந்த வகையில், உலக நாடுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான உணவு உண்ணும் முறைகளை கடைபிடிக்கின்றனர்.
ஜப்பான்
ஜப்பானில், ராமன் நூடுல்ஸை சாப்பிடும்போது சத்தம் எழுப்பிக்கொண்டே சாப்பிடுவது தான் சரியான முறையாம்.
இது மிகவும் மகிழ்ச்சியாக சாப்பிடுவதை உணர்த்துவதாக கூறப்படுகிறது.
தாய்லாந்து
தாய்லாந்து மக்கள் முதலில் போர்க் பயன்படுத்தி உணவை எடுத்து, அதை ஸ்பூனில் வைத்த பிறகு சாப்பிடுவார்கள்.
இந்த வினோத நடைமுறை புதிதாக செல்வோரை குழப்பமடைய செய்கிறது.
மத்திய கிழக்கு
மத்திய கிழக்கு நாடுகளில் உங்கள் வலது கையால் மட்டுமே சாப்பிடவேண்டும்.
வலது கையால் சாப்பிடுவது மரியாதைக்குரிய அடையாளமாக கருதப்படுகிறது. மேலும், சாப்பிடும் போது, உங்கள் விரல்களை நக்குவதையோ அல்லது உங்கள் வாயில் வைப்பதையோ தவிர்க்க வேண்டும்.
தென் கொரியா
தென் கொரியாவில் பெரியவர்களுடன் சாப்பிடும்போது மரியாதை யுத்தியை கடைபிடிக்கவேண்டும்.
அதாவது,பெரியவர்கள் முதலில் சாப்பிட ஆரம்பித்த பிறகு சிறியவர்கள் சாப்பிட வேண்டும்.
கஜகஸ்தான்
கஜகஸ்தானில் உங்களுக்கு ஒரு முழு கோப்பை தேநீர் கிடைத்தால், நீங்கள் வெளியேற வேண்டும் என்பது அர்த்தமாம்.
அரை கப் கிடைத்தால் அது நல்ல அறிகுறியாம்.