#Simple Solution - இப்படி தண்ணீர் குடிச்சா தொப்பை குறையுமாம்?
ஒரு நபர் தண்னீர் அதிகமாக எடுத்துக் கொள்வதே அவரது பல பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.
தொப்பை
உடல் எடையை குறைப்பது எளிதானது அல்ல, குறிப்பாக தொப்பை கொழுப்பைக் குறைப்பது எவ்வளவு கடினம் என்பது நம்மில் பலருக்குத் தெரியும். இன்று நிறைய பேருக்கு தொப்பையைக் குறைப்பது ஒரு இலக்காக உள்ளது.
தொப்பை ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மோசமான உணவு முறை, உடற்பயிற்சியின்மை மற்றும் மன அழுத்தம் போன்றவை முக்கிய காரணங்களாகும். பெரும்பாலான மக்கள் தொப்பையால் அதிகம் சிரமப்படுகிறார்கள். உடலில் வயிற்றுப் பகுதியில் தான் எளிதில் கொழுப்புக்கள் தேங்கும்.
மெட்டபாலிசம்
அதேப் போல் உடலிலேயே வயிற்றைச் சுற்றி தேங்கியுள்ள கொழுப்பைக் கரைப்பது தான் மிகவும் கடினம். இதில் வயது அதிகரிக்கும் போது உடலின் மெட்டபாலிசம் குறைந்து, தொப்பை வருவதற்கு காரணமாகும். ஆண்களை விட பெண்கள் தங்கள் வயிற்றில் அதிக உணர்திறன் கொண்டவர்கள்.
மேலும் மெதுவான மெட்டபாலிசம் தைராய்டு பிரச்சனைகள், சர்க்கரை நோய் மற்றும் பிற மருத்துவ கோளாறுகளால் பாதிக்கப்படலாம். மரபு ரீதியாகவும் தொப்பை பிரச்சனை தொடர்கிறது என்று சில ஆய்வறிக்கைகள் கூறுகிறது. ஒரு நபருக்கு முழுமையான சிறந்த தூக்கம் என்பது அவசியமான ஒன்று.
தண்ணீர் - தீர்வு
இரவில் நன்றாக தூங்கினால்தான் உடல் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படும். குறைந்தது 7 மணி நேரம் நிம்மதியாக தூங்குவது உடலுக்கு நல்லது. அந்த வகையில், தண்ணீரை போன்று ஒரு சிறந்த தீர்வை நாம் தந்துவிடவே முடியாது. உடல் எடை குறைப்பில் தண்ணீர் சிறந்த பயனை தருகிறது.
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உங்களது வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை தருகிறது, இதனால் அதிகபடியான உணவு உட்கொள்வது தடுக்கப்படுகிறது. தண்ணீரை குடிப்பதால் கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருப்பதோடு தொப்பை போடுவது இல்லாமல் போகிறது.
அதன் வரிசையில், சீரக நீர் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது. உடலில் சேர கூடிய கெட்ட கொலஸ்டரோலை அகற்ற ஒரு அற்புத வழி. இது தொப்பை கொழுப்பை கரைக்க உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ட்ரை பண்னி பாருங்களேன்...